வத்திக்கான் சிட்டியில் யாத்ரீகர்கள் கூட்டத்தில் இருந்த பெண் ஒருவர் திடீரென போப் பிரான்சிஸின் கையை பிடித்து இழுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செவ்வாய்க்கிழமை போப் பிரான்சிஸ் வத்திக்கான் நகரத்தில் உள்ள சதுக்கத்தின் வழியாக நடந்து சென்று யாத்ரீகர்களை வாழ்த்திக் கொண்டிருந்தார்.
கூட்டத்தில் குழந்தைகளின் கையை தொட்டு வாழ்த்தி முடித்து போப் திரும்பும் போது, கூட்டத்திலிருந்த பெண் ஒருவர் திடீரென போப் பிரான்சிஸின் கையை பிடித்து தன் பக்கம் இழுத்தார்.
இதனால், வலி ஏற்பட கோபமடைந்த அவர், பெண்ணின் கை மீது அடித்து தன் கையை விலக்கிக் கொண்டு கோபத்துடன் சென்றார்.
WATCH: Disgruntled Pope Francis pulls himself free from a woman's clutch in Vatican City https://t.co/2nap3R0iQ4 pic.twitter.com/tubJ1xmaxu
— Reuters (@Reuters) January 1, 2020
போப் அருகில் வருவதற்கு முன் சிலுவை அடையாளமிட்டு வணங்கிய அப்பெண், போப்பை இழுத்து அவரிடம் என்ன சொல்ல முயன்றார் என்பது தெரியவில்லை.