எடை அதிகமாக இருந்த காய்கறிக்கூடை... திறந்து பார்த்த அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

சட்டவிரோதமாக காய்கறி கூடையில் வைத்து, சிறுவனுக்கு எல்லையை கடக்க உதவிய ஒரு தம்பதியினரை குடிவரவு அதிகாரிகள் ஸ்பெயினில் கைது செய்துள்ளனர்.

திங்கட்கிழமை அன்று மொராக்கோவை சேர்ந்த ஒரு தம்பதியினர், வட ஆப்பிரிக்காவின் ஸ்பெயின் நகரமான மெலிலாவில் பெனி-என்சார் எல்லையை கடக்க முயன்றுள்ளனர்.

அப்போது அவர்கள் கொண்டு சென்ற பழங்கள் மற்றும் காய்கறிகள் நிறைந்த பையின் எடை அதிகமாக இருந்ததால், சந்தேகமடைந்த அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளனர்.

உள்ளே 10 வயது சிறுவன் இருப்பதை கண்டறிந்த பொலிஸார், அதனை பற்றி விசாரணை மேற்கொள்ள ஆரம்பித்தனர். அப்போது மெலிலாவில் தற்காலிக குடியேறியவர்களின் தங்குமிடத்தில் வசித்து வந்த சிறுவனின் தாயார் ஐரோப்பாவிற்கு தன்னுடைய மகனை எல்லையை கடத்துவதற்காக தம்பதியினரை நாடியிருப்பது தெரியவந்தது.

மேலும் இதற்காக அந்த தம்பதியினருக்கு சிறுவனின் தாய் சிறிது பணம் கொடுத்திருந்துள்ளார். இந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட சிறுவன், அவனது தாயாரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும், 38 வயதான பெண் மற்றும் அவரது 34 வயது ஆண் கூட்டாளி கடத்தல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...