டிரம்ப்பை கடுமையாக எச்சரித்த ஈரான் உச்ச தலைவர் கமேனி! முடிவு செய்தால் முடித்துவிடுவோம் என அச்சுறுத்தல்

Report Print Basu in ஏனைய நாடுகள்

புதன்கிழமை ஈராக்கில் போராளிக்குழு மீது அமெரிக்க வான்வழித் தாக்குதல்கள் நடத்தியதை ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி வன்மையாக கண்டித்துள்ளார்.,

அமெரிக்காவின் வன்மத்தை, ஈரானிய அரசாங்கமும் தேசமும் நானும் கடுமையாக கண்டிக்கிறோம் என்று கமேனி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் தெரிவித்துள்ளார்.

ஈராக்கிய இராணுவத் தளத்தின் மீது வெள்ளிக்கிழமை நடந்த ராக்கெட் தாக்குதலில் ஒரு அமெரிக்க சிவில் ஒப்பந்தக்காரர் கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கட்டைப் ஹெஸ்பொல்லா போராளிகளுக்கு எதிராக அமெரிக்க இராணுவம் ஞாயிற்றுக்கிழமை வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.

இதில், 25 பேர் கொல்லப்பட்டனர். இத்தாக்குதலை எதிர்த்தும் அமெரிக்காவிற்கு கண்டனம் தெரிவித்தும் ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தை போராட்டகாரர்கள் சூறையாடினர்.

அமெரிக்கா நலன்களில் ஏற்படும் உயிர் இழப்பு அல்லது சேதங்களுக்கு ஈரான் முழு பொறுப்பாக இருக்கும். அவர்கள் மிகப் பெரிய விலையை செலுத்துவார்கள்! இது ஒரு எச்சரிக்கை அல்ல, இது ஒரு அச்சுறுத்தல். புத்தாண்டு வாழ்த்துக்கள் என அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் எச்சரித்தார்.

இதற்கு பதிலளித்த ஈரான் உச்ச தலைவர் கமேனி ட்விட்டரில் பதிவிட்டதாவது, பாக்தாத்தில் நடந்த நிகழ்வுகளுக்கு நாங்கள் பொறுப்பு என்றும், ஈரானுக்கு பதிலடி கொடுப்போம் என அந்ந நபர் ட்விட் செய்துள்ளார்.

உங்களால் எங்கனை எதுவும் செய்ய முடியாது. நீங்கள் தர்க்கரீதியானராக இல்லை, இருந்திருந்தால் ஈராக், ஆப்கானிஸ்தானில் நீங்கள் செய்த குற்றங்களை பாருங்கள். அதனால், தான் அந்நாட்டு மக்கள் உங்களை வெறுக்கின்றனர்.

ஈரான் சவால்விட்டு மோத முடிவு செய்தால், அது சந்தேகத்திற்கு இடமின்றி செய்யும். நாங்கள் போர்களுக்குப் பின்வாங்குபவர்கள் அல்ல, ஆனால், தேசத்தின் நலன்கள், கண்ணியம் மற்றும் மகிமை ஆகியற்றை கடுமையாக பாதுகாக்கிறோம்.

யாராவது அதற்கு அச்சுறுத்தல் விடுத்தால், நாங்கள் தயக்கமின்றி அவர்களை எதிர்கொண்டு தாக்குவோம் என ஈரான் உச்ச தலைவர் கமேனி எச்சரித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்