உலகை மிரட்டு வகையில் அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்ட கிம்! அமெரிக்கா கொடுத்த பதில்

Report Print Santhan in ஏனைய நாடுகள்

வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் இனியும் எங்களால் பொறுமை காக்க முடியாது, அணு ஆயுத சோதனையை மீண்டும் துவங்குவோம், இந்த உலகிற்கு புதிய ஆயுதத்தை காட்டுவோம் என்று ஆவேசமாக பேசியிருந்த நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வடகொரியா ஒப்பந்தம் விவகாரத்தில் எல்லை மீறாது என்று நம்புவதாக தெரிவித்துள்ளார்.

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுக்ணை சோதனைகள் மூலம் உலகநாடுகளை மிரட்டி வந்த வடகொரியா, அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் சந்திப்புக்கு பின் அதை கைவிடுவதாக கூறியிருந்தது.

இதனால் கொரிய தீபகற்பத்தில் நிலவி வந்த பதற்றம் தணிந்தது. ஆனால் சமீபகாலமாக வடகொரியா அதிபரான கிம் ஜாங் உன் வெள்ளைக் குதிரையில் சவாரி செய்தார். அவர் ஏதேனும் முக்கிய முடிவுகள் எடுக்கப் போவது என்றால், அதற்கு முன் இப்ப்படி வெள்ளை குதிரை சவாரி செய்வார் என்று கூறப்பட்டிருந்தது.

அதை நிரூபிக்கும் வகையில் நேற்று கிம் ஜாங் உன், அணு ஆயுத சோதனை செய்வதை தற்போது கைவிட்ட போதும், தங்கள் நாட்டின் மீது இருக்கிற பொருளாதார தடை நீக்கப்படாததால், ஆவேசத்தில் டிரம்ப் முக்கிய சாதனையாக தற்பெருமையாக பேசிக் கொண்டிருக்கும், அணு ஆயுத சோதனைக்கான இடைக்கால தடையில் இனியும் எங்களால் பொறுமை காக்க முடியாது.

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளை நிறுத்தி வைப்பதற்கு இனி எந்தக் காரணமும் இல்லை. அணு ஆயுத சோதனைகளை நடத்துவது இல்லை எங்களுக்கு நாங்களே எடுத்த கொள்கை முடிவை கைவிடப் போகிறோம். இந்த உலகுக்கு விரைவில் புதிய ஆயுதத்தை காட்டப் போகிறோம் என்று அறிவித்தார்.

இந்த அறிவிப்பு அமெரிக்கா மற்றும் உலக நாடுகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இதையடுத்து கிம் ஜாங் உன்னின் இந்த அறிவிப்பு குறித்து டிரம்பிடம் கேட்கையில், அணு ஆயுதத்தை முற்றிலுமாக கைவிடுவதைப் பற்றி நாங்கள் இருவரும் ஒப்பந்தம் செய்துள்ளோம். அந்த வார்த்தையை கிம் நிறைவேற்றுவார் என நம்புகிறேன். எங்கள் இருவருக்குமே ஒருவரை ஒருவர் மிகவும் பிடிக்கும். எங்களுக்குள் நல்ல புரிதல் உள்ளது. இதுவரை நாங்கள் என்ன செய்தோமோ, அதையே இனியும் செய்வோம் என்று கூறியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்