முகத்தில் தாக்கப்பட்டு இரத்தம் வடியும் டிரம்ப்..! அமெரிக்கர்களை அதிர வைத்த ஈரானின் பதிலடி

Report Print Basu in ஏனைய நாடுகள்

அமெரிக்க அரசாங்க வலைத்தளம் ‘ஈரானிய ஹேக்கர்களால்’ ஹேக் செய்யப்பட்டு செயலிழக்கப்பட்டது.

மத்திய டெபாசிட்டரி நூலகம் திட்டத்தால் இயக்கப்படும் அமெரிக்க அரசாங்க வலைத்தளம் சனிக்கிழமை இரவு ஈரானிய ஹேக்கர்களால் ஹேக் செய்யப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டது.

ஈரான் தளபதி குவாசிம் சுலைமானியை அமெரிக்கா கொலை செய்ததற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சைபர் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என அமெரிக்க அதிகாரிகள் எச்சரித்த சில மணி நேரங்களிலேயே இவ்வாறு நடந்துள்ளது.

சனிக்கிழமை இரவு எஃப்.டி.எல்.பி வலைத்தளத்தை அணுக முயற்சிக்கும் பார்வையாளர்கள், பக்கம் ஹேக் செய்யப்பட்டு அதில் வெளியிடப்பட்ட போஸ்டரை கண்டு அதிர்ச்சியநை்துள்ளனர்.

அதில், தங்களை "ஈரான் சைபர் பாதுகாப்பு குழு" என்று அழைக்கும் ஹேக்கர்களிடமிருந்து செய்தியுடன் ஒரு கருப்பு பக்கம் காட்டப்பட்டது.

இந்த ஹேக் ஈரானின் இணைய திறனின் ‘சிறிய பகுதி’ மட்டுமே என்று எச்சரித்தது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முகத்தில் தாக்கப்பட்டு இரத்தம் வடியும் படத்தையும் அத்துடன் வெளியிட்டுள்ளது.

சைபர் தாக்குதலுக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதையும், அரசாங்கத்தின் ஏதேனும் தரவு திருடப்பட்டதா என்பதையும் உடனடியாக உறுதிப்படுத்த முடியவில்லை.

இந்த சைபர் தாக்குதல் குறித்து அமெரிக்க அரசாங்கம் உடனடியாக எந்தக் கருத்தும் இல்லை.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்