போருக்கான சிவப்புக் கொடியை ஏற்றிய ஈரான்: ஈராக்கிய ராணுவத்தினருக்கு அளிக்கப்பட்ட முக்கிய எச்சரிக்கை

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

ஈரானில் உள்ள புனித நகரமான கோமில் அமைந்துள்ள ஜம்கரன் மசூதியில் சனிக்கிழமையன்று இரத்த சிவப்பிலான 'பழிவாங்கும் கொடிகளை' கம்பத்தில் ஏற்றியுள்ளது.

ஈரானின் முக்கிய ராணுவ தளபதியான குவாசிம் சுலைமானியை அமெரிக்கா படுகொலை செய்துள்ளத்தை அடுத்து வளைகுடா நாடுகளில் போர் பதற்றம் சூழ்ந்துள்ளது.

அமெரிக்காவும் ஈரானும் தாங்கள் குறிவைத்துள்ள இலக்குகளை பகிரங்கமாக அறிவித்து எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஈரானின் புனித நகரமான கோமில் உள்ள ஜம்கரன் மசூதியின் தூபிகள் மீது சனிக்கிழமையன்று ஈரான் இரத்த சிவப்பு 'பழிவாங்கும் கொடிகளை' ஏற்றியுள்ளது.

மட்டுமின்றி இஸ்லாமிய அரசியல் மற்றும் போராளிகள் குழுவான லெபனானின் ஹெஸ்பொல்லா அமைப்பு,

ஈராக் வீரர்கள் ஞாயிற்றுக்கிழமை முதல் அமெரிக்க இராணுவ தளங்களில் இருந்து 1,000 மீற்றர்கள் வரை விலகி இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஈரானில் இருந்து பதிலடி தாக்குதலானது உள்நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ 'வாரங்களுக்குள்' முன்னெடுக்க வாய்ப்பிருப்பதாக பாதுகாப்பு சபை மூத்த அதிகாரி ஒருவர் டைம் பத்திரிகையிடம் தெரிவித்தார்.

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையேயான இந்த போர் சூழல் எதிர்காலத்தில் தணியும் என கருத வாய்ப்பே இல்லை.

பதிலடி எவ்வளவு மோசமாக இருக்கும், எங்கு, எதை தாக்கப் போகிறது என்பதுதான் ஒரே கேள்வி என்றார் அந்த அதிகாரி.

இதனிடையே 82 வான்படைப் பிரிவைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான அமெரிக்க ராணுவத்தினர் தொடர்ந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...