டிரம்ப் உண்மையில் ஒரு கோழை... கோட்டணிந்த பயங்கரவாதி: வறுத்தெடுத்த ஈரான் தளபதி

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தொடர்ந்து வெளியிடும் அச்சுறுத்தல்களுக்கு பதிலடி வழங்கியுள்ளது ஈரான்.

ஈரான் நாட்டுடன் மோதும் துணிவு அமெரிக்காவுக்கு இல்லை என ஈரானின் இராணுவத் தலைவர் மேஜர் ஜெனரல் அப்துல்ராஹிம் மெளசவி பகிரங்கமாக சவால் விடுத்துள்ளார்.

டொனால்டு டிரம்ப் உண்மையில் கோட்டணிந்த ஒரு பயங்கரவாதி என ஈரானிய தகவல் மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சர் முகமது ஜவாத் அசாரி பதிலளித்துள்ளார்.

ஹிட்லர் உள்ளிட்ட சர்வாதிகாரிகள் அனைவரும் கலாச்சாரத்திற்கு எதிரானவர்கள் எனவும், ஈரானை தகர்க்க எவராலும் முடியாது எனவும்,

வரலாறும் டிரம்பும் இந்த பாடங்களை மிக விரைவில் கற்றுக்கொள்வார்கள் எனவும் அமைச்சர் முகமது ஜவாத் அசாரி தமது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவை சீண்டினால், புதிய ஆயுதங்களால் ஈரானுக்கு பதில் அளிப்போம் என டிரம்ப் தெரிவித்திருந்த நிலையிலேயே ஈரானின் இராணுவத் தலைவர் மேஜர் ஜெனரல் அப்துல்ராஹிம் மெளசவி மற்றும் அமைச்சர் முகமது ஜவாத் அசாரி ஆகியோர் பகிரங்கமாக பதிலளித்துள்ளனர்.

இதனிடையே இந்தியாவில் அமைந்துள்ள தூதரக அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள அமெரிக்கா, அமெரிக்க அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் கவனமுடன் செயல்பட வேண்டும் எனவும் அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்