இனி இந்த நாட்டிலுள்ளவர்கள் வாரத்திற்கு நான்கு நாட்கள் வேலை செய்தால் போதும்!

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

பின்லாந்தின் பிரதமர் இனி தன் நாட்டு மக்கள் வாரத்திற்கு நான்கு நாட்கள் மட்டும் வேலை செய்யும் திட்டத்தை அறிமுகம் செய்ய இருக்கிறார்.

இளம் வயதிலேயே பின்லாந்தின் பிரதமராகியுள்ள Sanna Marin (34), தன் நாட்டு மக்கள் குடும்பத்துடன் அதிக நேரம் மகிழ்ச்சியுடன் செலவிட வேண்டும் என்பதற்காக இந்த முடிவை எடுத்துள்ளார்.

அத்துடன், நாளொன்றிற்கு பணியாளர்கள் ஆறு மணி நேரம் வேலை செய்தால் போதும். இப்படி செய்தால் ஒருவேளை உற்பத்தி பாதிக்கும் என நீங்கள் நினைக்கலாம்.

ஆனால், ஏற்கனவே ஸ்வீடன் 2015ஆம் ஆண்டிலேயே நாளொன்றிற்கு ஆறு மணி நேரம் வேலை செய்யும் திட்டத்தை அறிமுகம் செய்தது.

விளைவு, பணியாளர்களின் மகிழ்ச்சி மற்றும் வசதியுடன், உற்பத்தியும் அதிகரித்தது. அதேபோல், Microsoft Japan நிறுவனமும் கடந்த நவம்பரில் வாரத்திற்கு மூன்று நாட்கள் விடுமுறை திட்டத்தை அறிமுகம் செய்தது.

அந்த நிறுவனத்திலும் உற்பத்தி 39.9 சதவிகிதம் அதிகரித்ததைக் காணமுடிந்தது.

தற்போது, பின்லாந்து பிரதமரும், தன் நாட்டு மக்கள் வாரத்திற்கு நான்கு நாட்கள் மட்டும் வேலை செய்யும் திட்டத்தையும், பணியாளர்கள் நாளொன்றிற்கு ஆறு மணி நேரம் வேலை செய்யும் திட்டத்தையும் அறிமுகம் செய்ய இருக்கிறார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...