குவாசிம் இறுதி ஊர்வலத்தில் துயரம்... அடக்கம் செய்வதில் தாமதம்! மலை உச்சியில் நிற்கும் மக்களின் வீடியோ

Report Print Santhan in ஏனைய நாடுகள்

ஈரானில் குவாசிம் இறுதி ஊர்வலத்தின் போது சுமார் 35 பேர் பலியாகியிருப்பதாக கூறப்பட்ட நிலையில், தற்போது 200 பேர் காயமடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் அமெரிக்க இராணுவம் நடத்திய ஆளில்லா விமான தாக்குதல் ஈரானின் புரட்சிகர தளபதி குவாசிம் சுலைமானி கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை சம்பவத்தால் ஈரான் மற்று அமெரிக்காவிடையே போர் பதற்றம் உருவாகியுள்ளது.

இதற்கிடையில் நேற்று குவாசிம் சுலைமானியின் இறுதி ஊர்வலம் நேற்று ஈரான் தலைநகர் தெஹ்ரானில் நடைபெற்றது. இதையடுத்து தற்போது அவரின் உடல் சொந்த ஊரான Kerman-க்கு கொண்டு வரப்பட்டு, இறுதி ஊர்வலம் நடைபெற்றது.

இந்த இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி 35 பேர் சிக்கி உயிரிழந்திருப்பதாகவும், 200 பேர் காயமடைந்திருப்பதாகவும் ஈரான் தெரிவித்துள்ளது.

மேலும் அடக்கம் செய்வதற்காக குவாசிமின் உடல் கொண்டு வரப்படுவதை அறிந்து மக்கள், அங்கிருக்கும் மலை மீது ஏறி நின்றதால், கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது, இதன் காரணமாக குவாசிம் அடக்கம் செய்யும் நேரம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்