சவப்பெட்டியின் மேல் அமெரிக்கா கொடி!ஆயிரக்கணக்கான படையினர் கொல்லப்படுவர்: வைரலாகும் ஈரான் வீடியோ

Report Print Santhan in ஏனைய நாடுகள்

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் குவாசிம் சுலைமானி கொலை செய்யப்பட்ட பின் அமெரிக்காவின் கொடியை பதிவிட்ட நிலையில், அதே கொடி மூலம் சவப் பெட்டி ஒன்றை மூடி வைத்து ஆயிரக்கணக்கான அமெரிக்க படையினர் கொல்லப்படுவார்கள் என்று எச்சரிக்கை வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஈரான் புரட்சித் தளபதி குவாசிம் சுலைமானியை அமெரிக்கா கடந்த வாரம் ஆளில்லா விமானம் தாக்கி கொலை செய்த சம்பவம் பிராந்தியத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையில் குவாசிம் கொலை செய்யப்பட்டார் என்ற அறிவிப்பு வெளியானவுடன், டிரம்ப் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், அமெரிக்காவின் கொடியினை பதிவிட்டார்.

அந்த பதிவிற்கு கீழே ஈரான் மக்கள் சிலர் இதற்கு நிச்சயமாக பழிவாங்கல் இருக்கும் என்று அமெரிக்கா மீது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வரும் நிலையில், ஈரான் சமூக ஊடகங்களில் தற்போது ஒரு வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், டிரம்ப்பின் டுவிட்டில் இருப்பது போன்று, சவப்பெட்டி ஒன்றில் அமெரிக்காவின் கொடி போர்த்தப்பட்டிருக்கிறது, அதன் கீழே அமெரிக்க படையினர் கொல்லப்படுவர் என்று அதற்கு கீழே இருக்கும் குறி ஒன்று அதிகரித்து கொண்டே செல்கிறது.

இதனால் ஈரான் தலைவர்கள் மட்டுமின்றி, அந்நாட்டு மக்கள் பலரும் அமெரிக்கா மீது கடும் கோபத்தில் உள்ளனர் என்பதை இந்த வீடியோ காட்டுகிறது. இந்த வீடியோ குறித்து ஒரு விவாதமே சென்று கொண்டிருக்கிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...