உலகின் சக்திவாய்ந்த இராணுவம் எங்களிடம் உள்ளது! ஈரான் தாக்குதலுக்கு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டிரம்பின் பதிலடி!

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

அமெரிக்க இராணுவ தளம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில் அது தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் முக்கிய பதிவை வெளியிட்டுள்ளார்.

ஈராக் நாட்டு தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்க படைகள் உள்ள அல் ஆசாத், இர்பில் விமானப்படை தளங்கள் மீது 10- க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல் நடத்தியதால் இரு நாடுகளுக்கிடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் டுவிட்டரில், எல்லாம் நலம்! ஈரானிலிருந்து ஏவப்பட்ட ஏவுகணைகள், ஈராக்கில் உள்ள இரண்டு அமெரிக்க ராணுவ தளத்தை தாக்கியது.

இதன் உயிரிழப்புகள் மற்றும் சேதங்கள் குறித்து மதிப்பீடு செய்யப்பட்டு வருகிறது.

உலகின் மிக சக்திவாய்ந்த மற்றும் நவீன ஆயுதங்கள் தாங்கிய இராணுவம் எங்களிடம் உள்ளது! இது தொடர்பில் நாளை காலை ஒரு அறிக்கையை வெளியிடுவேன் என பதிவிட்டுள்ளார்.

ஈரான் தாக்குதலை தொடர்ந்து, எங்களிடம் சக்தி வாய்ந்த ஆயுதங்கள் உள்ளது என டிரம்ப் பதிவிட்டுள்ளது அந்நாட்டை மிரட்டுவதற்காகவே என பார்க்கப்படுகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers