ஈரானுக்கு நிச்சயம் பெரிய அடி கொடுப்போம்! குவாசிம் ஒரு பயங்கரவாதி... இஸ்ரேல் கடும் எச்சரிக்கை

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

ஈரான் எங்கள் மீது கையை வைத்தால் நிச்சயம் பெரிய அடி கொடுப்போம் என இஸ்ரேல் பிரதமர் Benjamin Netanyahu எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஈரான் தளபதி காசிம் சுலைமானியை அமெரிக்கா கொன்றதையடுத்து இருநாடுகளிடையே கடும் பதற்றம் நிலவி வருகிறது, இதற்குப் பதிலடியாக அமெரிக்க ராணுவம் மற்றும் ட்ரம்ப்பை பயங்கரவாதி என்று அறிவித்த ஈரான், அமெரிக்கப் படைகள் மீது தாக்குதல் நடத்தியது.

இந்தத் தாக்குதலில் 80 அமெரிக்கர்கள் பலி என்று ஈரான் ஊடகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் எங்களின் எதிரி என ஈரான் உச்சத்தலைவர் Ali Khamenei இன்று பேசினார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசியுள்ள இஸ்ரேல் பிரதமர் Benjamin Netanyahu, ஈரான் எங்கள் மீது கையை வைத்தால் நிச்சயம் பெரிய அடி கொடுப்போம்.

எங்கள் மீது தாக்குதல் நடத்த யார் முயற்சித்தாலும் பெரிய அளவில் பதிலடி கிடைக்கும். ஈரானிய புரட்சிப்படை தளபதி குவாசிம் சுலைமானி ஒரு தலைமைப் பயங்கரவாதி என காட்டமாக கூறியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்