டிரம்ப் பேசிய அடுத்த சில மணி நேரங்களிலே மீண்டும் ஈராக் தலைநகரில் ராக்கெட் தாக்குதல்

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

ஈராக் தலைநகரில் அதிக சத்தத்துடன் இரண்டு குண்டுகள் வெடித்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

அல்-மாயதீன் கூற்றுப்படி, மத்திய பாக்தாத்தில் உள்ள பசுமை மண்டலத்தில் இரண்டு ராக்கெட்டுகள் விழுந்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

அங்கு அரசாங்க கட்டிடங்கள் மற்றும் இராஜதந்திர வசதிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

பாக்தாத்தின் பசுமை மண்டலத்தில் இரண்டு ராக்கெட்டுகள் விழுந்ததை ஸ்பூட்னிக் பாதுகாப்பு வட்டாரம் உறுதிப்படுத்தியுள்ளது.

மூன்று எம்.எல்.ஆர்.எஸ் ராக்கெட்டுகள் மண்டலத்தில் விழுந்து தீப்பிடித்தன. அமெரிக்க தூதரகத்திலிருந்து 100 மீட்டர் தொலைவில் ராக்கெட்டுகளில் ஒன்று விழுந்ததாக அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பசுமை மண்டலம் தாக்கப்படுவது இது முதல் முறை அல்ல. ஞாயிற்றுக்கிழமை பிற்பகுதியில், பசுமை மண்டலத்தை குறிவைத்து கடுமையான ஷெல் தாக்குதல் நடத்தப்பட்டது. சோவியத் தயாரித்த கத்யுஷா எம்.எல்.ஆர்.எஸ் ராக்கெட்டுகள் என அடையாளம் காணப்பட்ட, குறைந்தது 3 குண்டுகள் பாக்தாத்தின் மையத்தைத் தாக்கியதாக ஈராக் இராணுவம் கூறியிருந்தது.

ஈரானுக்கு எதிராக இனி அமெரிக்கா இராணுவ வலிமையை பயன்படுத்தாது எனக்கூறிய அடுத்த சில மணி நேரங்களில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...