ரஷ்ய ஏவுகணையால் வீழ்த்தப்பட்ட உக்ரைன் விமானம்! அதிகாரிகள் வெளியிட்டுள்ள தகவல்

Report Print Abisha in ஏனைய நாடுகள்
268Shares

ஈரானில் விபத்திற்குள்ளான உக்ரைன் விமானம், ரஷ்ய ஏவுகணையால் வீழ்த்தப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஈரான் அமெரிக்கா இடையே போர் பதற்றம் நீடித்து வருகின்றது. இந்நிலையில், ஈரானில் இருந்து புறப்பட்ட உக்ரைன் விமானம் வெடித்து சிதறியது.

176 பேர் பலி கொண்ட அந்த விமான விபத்தில், கருப்பு பெட்டியை அந்த விமான நிறுவனத்திடம் ஒப்படைக்க ஈரான் மறுப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், அமெரிக்க அதிகாரிகள் ரஷ்யாவில் தயாரித்த ஏவுகணையை கொண்டு அந்த விமானம் வீழ்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

ஆனால், அமெரிக்க வெளி உறவுத்துறை அமைச்சர் Pompeo கூறுகையில், உண்மையில் என்ன நடந்தது என்று விசாரணையில் தெரியும். அதற்கு உண்மையில் ஈரான் தான் காரணம் என்று தெரிவிக்க முடியாது.

ஒருவேளை ஈரான் தான் சுட்டு வீழ்த்தியது என்றால், ஈரானியர் ஈரானியர்களை கொன்றுள்ளனர் என்று விளக்கம் அளித்துள்ளார்.

இது குறித்து கனடா உள்ளிட்ட நாடுகளும் விசாரணை தேவை என்று குரல் கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்