ஈரானில் நிலநடுக்கம் இயற்கையாக ஏற்படவில்லை? அதற்கு உண்மை காரணம் என்ன? வெளியான அதிர்ச்சி தகவல்

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்
794Shares

ஈரானில் ஏற்பட்ட நிலநடுக்கம் அணு ஆயுத சோதனை காரணமாக ஏற்பட்ட அதிர்வாக இருக்கலாம் என்று வல்லுநர்கள் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரான் - அமெரிக்கா இடையில் போர் வருவதற்கான சூழ்நிலைகள் நிலவி வருகிறது.

இந்நிலையில் ஈரானில் இரு தினங்களுக்கு முன்னர் 4.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

ஈரானில் உக்ரைன் விமானம் விழுந்து நொறுங்கிய சில நிமிடத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் ஈரானில் இருந்து தெற்கு பகுதியில் போர்சாஜன் பகுதியில் உள்ள புஷ்ஹேர் அணுமின் நிலையத்தில் இருந்து 17 கி.மீ தூரத்தில் ஏற்பட்டது. இதனால் யாரும் உயிர் இழக்கவில்லை.

அணுமின் நிலையம் அருகே இப்படி ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டு இருப்பது உலக நாடுகளை நிறைய சந்தேகத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது.

இந்த நிலநடுக்கம் உண்மையில் நிலநடுக்கம் கிடையாது. இது அணு ஆயுத சோதனை காரணமாக ஏற்பட்ட அதிர்வு என்று வல்லுனர் கூறுகிறார்கள்.

அப்படி பார்த்தால் இது செயற்கையான நிலநடுக்கம் தான்.

அமெரிக்காவில் இருக்கும் பாதுகாப்புத்துறை வல்லுநர்கள் இது தொடர்பாக சந்தேகம் எழுப்பி உள்ளனர்.

பொதுவாக அணு ஆயுத சோதனைகள் அணு மின் நிலையத்திற்கு அருகே நடக்கும். ரஷ்யாவின் சோதனைகள் பெரும்பாலும் இப்படித்தான் நடந்துள்ளது. அதேபோல்தான் தற்போது ஈரானும் அணு ஆயுத சோதனையை அணுமின் நிலையம் அருகிலேயே நடத்தி உள்ளது என்கிறார்கள்.

இதனால் ஈரானிடம் உண்மையில் அணு ஆயுதங்கள் வந்துவிட்டதா என்று சந்தேகம் எழுந்துள்ளதாக வல்லுனர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்