பிரித்தானியா-கனடா சொல்வது உண்மையா? 176 பேர் பயணிகள் விமானத்தை தாக்கும் மர்ம பொருளின் வீடியோ வெளியானது

Report Print Santhan in ஏனைய நாடுகள்
783Shares

ஈரானின் 176 பேர் சென்ற பயணிகள் விமான விபத்திற்கு ஈரான் தான் காராணம் என்று அமெரிக்கா மற்றும் கனடா கூறி வரும் நிலையில் வீடியோ ஒன்று வெளியாகி புதிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இருக்கும் Imam Khomeini சர்வதேச விமானநிலையத்தில் இருந்து உக்ரைன் இண்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று விமான ஊழியர்கள் உட்பட 176 பேருடன் புறப்பட்ட சிறிது நேரத்திலே விபத்தில் சிக்கியது

இந்த விபத்தில் விமானத்தில் இருந்த பிரித்தானியர்கள் நான்கு பேர், கனேடியர்கள் 63 பேர் என இன்னும் சில நாட்டினர் பரிதாபமாக இறந்தனர்.

இந்த விமான் விபத்து தொழில்நுட்ப கோளாறால் ஏற்பட்டது போன்று தெரியவில்லை(தவறுதலாக நடந்திருக்கலாம்), ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதல் தான் என்று பிரித்தானியார் பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் கனடிய பிரதமர் குற்றம் சாட்டினர். இரண்டு நாட்டின் உளவுத்துறையினரும் இதே தகவலை கொடுத்திருப்பதாக கூறப்பட்டது.

மேலும் உளவுத்துறையில் இருக்கும் அமெரிக்க அதிகாரி ஒருவர், விமானம் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட எஸ்.ஏ -15 ஏவுகணைகளால் சுட்டு வீழ்த்தப்பட்டது என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் பிரபல ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு புதிய வீடியோ ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் அனுப்பிய நபர் யார் என்பது குறித்து ஊடகம் வெளியிடவில்லை.

அதில், அன்றைய தினம் அதிகாலை வானத்தில் ஏவுகணை ஒன்று வீசப்படுவது போன்றும், அந்த ஏவுகணை வானத்தில் இருக்கும் ஒரு பொருளை தாக்குவது போன்றும் அது எரிந்த நிலையில் கீழே விழுவது போன்றும் உள்ளது. குறிப்பாக இந்த வீடியோவையும், விமான விபத்தையும் ஒப்பிட்டு பார்க்கும் போது, விமான விபத்து குறித்த செய்தி அடுத்த சில நிமிடங்களில் வெளி வந்ததாக குறிப்பிட்டுள்ளது.

மேலும் குறித்த ஆங்கில ஊடகம், இந்த வீடியோவின் நம்பகத்தன்மையை சரிபார்க்க முடியாது என்பதால், அந்த வீடியோவை சற்று கூர்ந்து கவனிக்கும் போது, ஈரானிய தலைநகர் பாராண்டில் இருக்கும் கட்டிடங்கள் தெரிகின்றன. விமானம் நாட்டின் வடக்கே விபத்துக்குள்ளானது.

வீடியோவை அனுப்பிய நபரிடமிருந்தும், அதை அவர்கள் எவ்வாறு பெற்றார்கள் ஆங்கில ஊடகமான சி.என்.என் கூடுதல் தகவல்களைக் கேட்டுள்ளது, ஆனால் இதுவரை அந்த நபர் எந்த ஒரு பதிலும் அளிக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்