176 பேர் பயணிகள் விமான விபத்தில் மறைந்திருக்கும் மர்மம்! உண்மையை நிரூபிக்க ஈரான் எடுத்துள்ள முக்கிய முடிவு

Report Print Santhan in ஏனைய நாடுகள்

176 பேர் சென்ற பயணிகள் விமானம் விபத்தில் சிக்கவில்லை, ஈரான் தான் சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்கா, பிரித்தானியா, கனடா போன்ற நாட்டினர் கூறி வருவதால் ஈரான் ஒரு முக்கிய முடிவு எடுத்துள்ளது.

ஈரான் தளபதி குவாசிம் சுலைமானி கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பின் அமெரிக்காவிற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரான், ஈராக்கில் இருக்கும் அமெரிக்க இராணுவதளங்கள் மீது தாக்குதல் நடத்தியது. அதே தினத்தன்று உக்ரைன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதில் 176 பேர் பரிதபாம இறந்தனர்.

அமெரிக்கா-ஈராக் இடையே போர் பதற்றம் உருவாகி வரும் நிலையில், இந்த விமான விபத்திற்கு முக்கிய காரணம் ஈரான் என்று அமெரிக்கா, பிரித்தானியா, கனடா போன்ற நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன.

விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளன.

உலகளாவிய விமான போக்குவரத்துத்துறை விதிகளின் கீழ், இந்த விபத்து குறித்து விசாரணையை வழிநடத்த ஈரானுக்கு உரிமை உண்டு. அந்த அடிப்படையில் தனி விசாரணை குழுவை அமைத்து ஈரான் இந்த விபத்து குறித்து விசாரித்து வருகிறது.

பொதுவாக இதுபோன்ற விசாரணைகளில் அந்த விமானத்தை தயாரித்த நிறுவனமும், விமானத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட கருப்பு பெட்டியில் உள்ள தகவல்களை ஆய்வு செய்யும் திறன் பெற்ற சில நாடுகளும் ஈடுபடுவது வழக்கமானது.

ஆனால், விபத்துக்குள்ளான உக்ரைன் விமானத்தில் இருந்து மீட்கப்பட்ட கருப்பு பெட்டியை அதன் உற்பத்தியாளரான அமெரிக்காவை சேர்ந்த போயிங் நிறுவனத்திடமோ அல்லது அமெரிக்க அரசிடமோ ஒப்படைக்க மாட்டோம் என்று ஈரான் அறிவித்திருந்தது, பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் தற்போது இந்த விமான விபத்தின் விசாரணையில் உக்ரைன் மற்றும் போயிங் நிறுவன அதிகாரிகளை ஈரான் அழைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு முக்கிய காரணம், மேற்கந்திய நாடுகளின் தலைவர்கள் இந்த விமான விபத்து குறித்து ஈரான் மீது குற்றம் சாட்டி வருவதால், இந்த முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி மற்ற நாடுகளின் நிபுணர்களையும், அழைக்க ஈரான் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், இந்த விமான விபத்து குறித்து ஈரான், வானில் வந்த பொருளில் மோதியதா?, ஈரானின் ஏவுகணை அழிப்பு அமைப்பில் இருந்து வந்த ராக்கெட் தாக்கியதா?, தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானத்தில் வெடிவிபத்து ஏற்பட்டதா?, பயங்கரவாத சதியால் விமானத்தில் வெடிவிபத்து நிகழ்ந்ததா? உள்ளிட்ட கோணங்களில் விசாரித்து வருவதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்