ஈரானில் 176 பேரை பலியான அதே இடத்தில் நடந்த பேருந்து விபத்து! உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை வெளியானது

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்
91Shares

ஈரானில் நடந்த பேருந்து விபத்தில் 20 பயணிகள் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஈரான் - அமெரிக்கா போர் பதற்றம் ஒரு பக்கம் இருக்கும் நிலையில் நேற்று முன் தினம் 176 பயணிகளுடன் ஈரான் தலைநகர் Tehranல் இருந்து புறப்பட்ட பயணிகள் விமானம் வெடித்து சிதறியதில் விமானத்தில் இருந்த அனைவரும் உயிரிழந்தனர்.

இந்த சோகம் மறைவதற்குள் நேற்று Tehranல் இருந்து Gonbad நகரம் நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து பெரும் விபத்தில் சிக்கியது.

இந்த கோர விபத்தில் 20 பயணிகள் உயிரிழந்ததாகவும், சிலர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பேருந்து மிக வேகமாக சென்ற நிலையில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த அதிகாரிகள் முதற்கட்ட விசாரணையில் பேருந்தின் பிரேக் செயலிழந்ததால் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை பேருந்து இழந்ததாக தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்