தடயங்களை அழிக்கும் ஈரான்? ஆதாரத்தோடு வெளியான புகைப்படம்: உண்மை வெளிவருமா?

Report Print Santhan in ஏனைய நாடுகள்
806Shares

ஈரானில் விமான விபத்து நடந்த இடத்தில் கனரக வாகனமான புல்டோசர்கள் பயன்படுத்தியிருப்பதால், உண்மையை மறைக்க ஈரான் முயல்வதாக குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று கடந்த புதன் கிழமை விமான விபத்தில் சிக்கியதால், விமானத்தில் இருந்த 176 பேரும் பரிதாபமாக இறந்தனர்.

இந்த விமான விபத்திற்கு முக்கிய காரணம் ஈரான் தான் எனவும், ஈரான் நாட்டின் ஏவுகணை தான் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக என்ற குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

விபத்து நடந்த இடத்தில் விசாரணை மேற்கொண்டால், தடவியலாளர்கள் அங்கு சோதித்து பார்த்தால் என்ன காரணம் என்பது தெரியவரும் என்று கூறப்படும் நிலையில், புலனாய்வு வலைத்தளமான பெல்லிங்காட்டின் ஆராய்ச்சியாளரான ஜியான்கார்லோ பியோரெல்லா, தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் விமான விபத்து நடந்த இடத்தில் கனரக இயந்திரங்களை பயன்படுத்தியதாக குறிப்பிட்டுள்ளார்.

இதை நான் குற்றத்தின் காட்சியாக இருக்கக் கூடும் என்று, இது சுட்டு வீழ்த்தப்படுவதாக இருந்தால், ஒரு முழுமையான விசாரணை நடத்தப்படுவதற்கு முன்பு நீங்கள் விபத்துக்குள்ளான இடத்தைத் இது போன்று தொந்தரவு செய்யும் வகையில் நடந்து கொள்ள கூடாது என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஜேர்மனிக்கான அமெரிக்க தூதர் ஒருவர் ஈரான் உண்மையை மூடி மறைப்பதற்காக இப்படி செய்வதாக குற்ற சாட்டியுள்ளார்.

விபத்து நடந்த இடத்தில் கனரக இயந்திரங்கள் இருப்பது விபத்துக்குப் பின்னால் உள்ள உண்மையைத் தேடுவதை சிக்கலாக்கும் என்று ஆய்வாளர்கள் கூறி வருகின்றனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்