ஈரான் விமான விபத்து: மரணத்தை முன் கூட்டியே அறிந்த இளம்பெண்... கணவனுக்கு எழுதிய கவிதை!

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

ஈரான் தலைநகரிலிருந்து அந்த விமானம் புறப்பட சரியாக 20 நிமிடம் இருக்கும்போது, விமானத்திலிருந்து ஒரு பெண் தனது கணவனை அழைத்தார்.

ரொரன்றோவில் வாழும் Sheyda Shadkhoo என்ற அந்த பெண், மூன்று வார விடுமுறையில் ஈரானிலிருக்கும் தனது தாயையும் சகோதரிகளையும் பார்ப்பதற்காக சென்றிருந்தார்.

விடுமுறை முடிந்து கனடாவில் இருக்கும் அவரது கணவருடன் சேர்ந்துகொள்வதற்காக விமானம் ஏறிய Sheyda, விமானம் புறப்பட சரியாக 20 நிமிடம் இருக்கும்போது தனது கணவர் Hassan Shadkhooவை மொபைலில் அழைத்துள்ளார்.

கணவரிடம் சுலைமான் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவு பாதிக்கப்பட்டுள்ளது குறித்து அவர் கவலை தெரிவித்துள்ளார்.

போர் வராதுதானே? என்று அவர் கணவரிடம் கேட்க, Hassanம் ஒன்றும் ஆகாது கவலைப்படாதே என்று கூற, ஓகே, மொபைலை ஆஃப் செய்ய சொல்கிறார்கள், குட் பை என்று சொல்லி மொபைல் அழைப்பை துண்டித்திருக்கிறார் Sheyda.

CNN

சிறிது நேரத்தில் விமானம் விபத்துக்குள்ளாக, பலியானவர்களுடன் Sheydaவும் பலியானார்.

இதற்கிடையில், ஈரானை விட்டு புறப்படும் முன் இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படத்தை பதிவிட்டு கவிதை ஒன்றை எழுதியுள்ளார் Sheyda.

அந்த கவிதை,

’நான் போகிறேன்...

ஆனால், நான் விட்டுச் செல்லும் விடயங்கள்

என்னை கவலையில் ஆழ்த்துகிறது,

நான் விட்டுச் செல்லும் என் மக்களைக் குறித்து பயப்படுகிறேன்’ என்று சொல்கிறது.

அந்த கவிதையை படித்துவிட்டு, அவரது கணவர் Hassan, தன் மனைவிக்கு இப்படி ஒரு அசம்பாவிதம் ஏற்படும் என்பது முன்கூட்டியே தெரிந்திருக்கிறது, அதனால்தான் இப்படி ஒரு கவிதையை எழுதியிருக்கிறார் என்கிறார்.

10 வருடங்கள் அவளுடன் வாழ்ந்துவிட்டு, இனி அவள் இல்லாத ஒரு வாழ்க்கையை கற்பனை செய்துகூட பார்க்கமுடியாது என்று விசும்பும் Hassan, அவள் ஒரு தேவதை, நானும் இறந்திருக்கக்கூடாதா என்று தோன்றுகிறது என்கிறார்.

CNN

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்