176 பேரின் உயிரை காவு வாங்கிய விமானத்தின் கருப்பு பெட்டி குறித்து ஈரான் வெளியிட்டுள்ள நம்பமுடியாத தகவல்

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

ஈரானில் 176 பயணிகளின் உயிரை காவு வாங்கிய விமானத்தில் உள்ள கருப்பு பெட்டியில் தொழில்நுட்ப கோளாறு இருக்கலாம் என விமான போக்குவரத்து அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ஈரான் தலைநகர் Tehranவின் Imam Khomeini சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இரு தினங்களுக்கு முன்னர் கிளம்பிய பயணிகள் விமானம் வெடித்து சிதறியது.

இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 176 பயணிகளும் உயிரிழந்தனர்.

இந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்ததாக கனடா கூறிய நிலையில் அதை ஈரான் மறுத்தது.

இந்நிலையில் விமானத்தில் இருந்த கருப்பு பெட்டியை ஈரான் ஒப்படைக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.

ஆனால் அமெரிக்காவை சேர்ந்த போயிங் நிறுவனத்திடமோ அல்லது அமெரிக்க அரசிடமோ ஒப்படைக்க மாட்டோம் என்று ஈரான் அறிவித்துள்ளது

இந்த சூழலில் கருப்பு பெட்டி தொடர்பில் ஈரான் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

அதாவது ஈரான் விமான போக்குவரத்து சார்பில் வெளியாகியுள்ள அறிக்கையில், விமானத்தில் உள்ள கருப்பு பெட்டியில் தொழில்நுட்ப கோளாறு இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் விமான விபத்து தொடர்பில் ஈரான் உண்மையை மூடி மறைக்க முயல்வதாக எழுந்துள்ள சந்தேகம் வலுத்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்