176 பேரை காவு வாங்கிய உக்ரைன் விமான விபத்தில் மர்மம் நீங்கியது..! உண்மையை ஒப்புக்கொண்ட ஈரான்: முக்கிய அறிவிப்பு

Report Print Basu in ஏனைய நாடுகள்

176 உயிர்களை பலிவாங்கிய உக்ரைன் விமான விபத்து தொடர்பில் ஈரான் ஆயுதப்படையின் தலைமையகம் முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அமெரிக்கா-ஈரான் இடையே நிலவி வந்த பதட்டமான சூழலில் தெஹ்ரானில் இருந்து புறப்பட்ட உக்ரைனுக்கு சொந்தமான பயணிகள் விமானம் தரையில் விழுந்து வெடித்து சிதறியது.

இதில் பயணித்த 176 பேரும் உயிரிழந்தாக அறிவிக்கப்பட்டது. மேலும், விமானம் ஈரான் ஏவுகணையால் தாக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகங்கள் எழுந்தது.

மேலும். ரஷ்யாவில் தயாரித்த டோர்-எம் 1 வான் ஏவுகணை அமைப்பால் உக்ரைன் ஏர்லைன்ஸ் விமானம் 752 தாக்கப்பட்டதாக பென்டகன் கூறியது. இதை அதிரடியாக மறுத்த ஈரான் நிரூபிக்கும் படி சவால் விடுத்தது.

இந்நிலையில், விபத்து தொடர்பில் ஈரான் ஆயுதப்படையின் தலைமையகம் முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், மனித பிழை மற்றும் தற்செயலாக உக்ரேனிய பயணிகள் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தெரிவித்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...