அமெரிக்காவுக்குள் அனுமதி மறுக்கப்பட்ட புகலிடக்கோரிக்கையாளர் எடுத்த கோர முடிவு!

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

அமெரிக்காவுக்குள் அனுமதி மறுக்கப்பட்ட புகலிடக்கோரிக்கையாளர் ஒருவர், பொதுமக்கள் மற்றும் பொலிசாரின் கண் முன்னாலேயே கழுத்தை அறுத்துக்கொண்டார்.

மெக்சிகோவைச் சேர்ந்த Jesús García Serna (36), மெக்சிகோ எல்லை நகரமான Reynosaவையும் டெக்சாசையும் இணைக்கும் Pharr-Reynosa சர்வதேச பாலம் வழியாக அமெரிக்காவுக்குள் நுழைய முற்பட்டுள்ளார்.

அமெரிக்காவுக்குள் சென்று புகலிடம் கோரி விண்ணப்பம் அளிப்பது அவருடைய நோக்கம். ஆனால், அமெரிக்க சுங்க மற்றும் எல்லை பாதுகாப்பு அதிகாரிகள், அந்த வழியாக வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும், நடந்து செல்லும் மனிதர்களுக்கு அனுமதி இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

எனவே திரும்பி மெக்சிகோவுக்கே சென்றுவிடுங்கள் என அவர்கள் García Sernaவிடம் கூறியுள்ளனர்.

ஆனால், மனமுடைந்த García Serna, அங்கிருக்கும் வாகன சாரதிகள் மற்றும் அதிகாரிகள் கண் முன்னாலேயே கத்தி ஒன்றை எடுத்து தனது கழுத்தை அறுத்துக்கொண்டுள்ளார்.

மக்கள் அதிர்ச்சியில் உறைய, சம்பவ இடத்திலேயே García Sernaவின் உயிர் பிரிந்துள்ளது.

அமெரிக்காவுக்குள் புகலிடம் கோரி நுழைய முயன்ற ஒருவர், எல்லையிலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...