உக்ரேன் விமானத்தை நடுவானில் பூட்டிய ஈரான்... தொடர்ந்து ஏவுகணை தாக்குதல்: வெளிவரும் புதிய தகவல்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் சுட்டு வீழ்த்தப்பட்ட உக்ரேனிய விமானத்தை நடுவானில் ஈரானிய ராணுவம் பூட்டியதாகவும் அதன் பின்னரே தாக்கியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தெஹ்ரானில் இருந்து புறப்பட்டு சுமார் 6 நிமிடங்களில் உக்ரேனிய பயணிகள் விமானம் விபத்தில் சிக்கியது.

பயணிகளுக்கும் விமான ஊழியர்களுக்கும் உதவி கோரவே வாய்ப்பளிக்காமல் விமானம் தகர்க்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் தற்போது ஈரானிய அரசாங்கம் தங்கள் தவறான முடிவே விமானம் சுட்டு வீழ்த்தப்பட காரணமாக அமைந்தது என ஒப்புக்கொண்டுள்ளனர்.

ஈரானில் இருந்து ஏவுகணை தாக்குதல் முன்னெடுக்கப்பட்ட வேளையில், ரடார் உள்ளிட்ட அனைத்தையும் ராணுவ நிபுணர்கள் பூட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் குறித்த விமானத்தில் இருந்து விமானியால் உதவி கோரவோ, விமானத்தை திசை திருப்பவோ முடியாமல் போனதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜனவரி 8 ஆம் திகதி அதிகாலையில் என்ன நடந்தது என்பது தொடர்பில் அமெரிக்காவும், பிற நாடுகளும் ஆதாரங்களுடன் தகவல் வெளியிட்டிருந்தனர்.

ஏவுகணை ஒன்று குறித்த விமானத்தில் மோதும் காட்சிகளையும் பதிவு செய்து வெளியிட்டனர்.

மட்டுமின்றி, விமானத்தின் பாகங்கள் கண்டெடுக்கப்பட்ட பகுதியில் ஏவுகணையின் பாகங்களும் கண்டெடுக்கப்பட்டது.

உக்ரேனிய பயணிகள் விமானம் வெடித்துச் சிதறிய அதே வேளையில், தெஹ்ரான் வான்பரப்பில் காணப்பட்ட விசித்திரமான காட்சியை ஊடகங்களும் பதிவு செய்து வெளியிட்டன.

மட்டுமின்றி, உறுதியான ஆதாரங்களுடன் கனடா, பிரித்தானியா மற்றும் அமெரிக்க நிபுணர்கள் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தனர்.

இவர்கள் வெளியிட்டுள்ள ஆதாரங்களில் ஏவுகணை ஒன்று சீறிப்பாய்வதும், விமானம் மீது மோதுவதும் அதன் பின்னர் ஏற்படும் அதிர்வலைகளையும் சுட்டிக்காட்டியிருந்தனர்.

இந்த நிலையிலேயே, தற்போது ஈரான் மனிதத் தவறு என தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளது.

ரஷ்யாவின் எஸ்.என் 15 ரக ஏவுகணைகளை பயன்படுத்தியே உக்ரேனிய பயணிகள் விமானத்தை ஈரான் வீழ்த்தியுள்ளது.

இந்த விவகாரத்தை ஈரான் ஒப்புக்கொண்டாலும், அமெரிக்காவின் அச்சுறுத்தலே இதற்கு முக்கிய காரணம் என்ற வாதத்தையும் தற்போது ஈரான் முன்வைத்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...