வெடித்து சிதறிய எரிமலை: மெக்சிகோவில் மஞ்சள் எச்சரிக்கை!

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

நேற்று காலை 6.30 மணியளவில் மெக்சிகோவில் எரிமலை ஒன்று வெடித்துச் சிதறியதைத் தொடர்ந்து சுற்று வட்டாரங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மெக்சிகோ நகருக்கு அருகில் அமைந்திருக்கும் Popocatepetl எரிமலை வெடித்துச் சிதறி நெருப்புக் குழம்பைக் கக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

தொடர்ந்து புகைந்து கொண்டிருக்கும் அந்த எரிமலை திடீரென சிவந்த நிறத்தில் எரிமலைக் குழம்பை கக்குகிறது.

அதைத் தொடர்ந்து அடர்த்தியான புகை பழுப்பு நிறத்தில் வெளியாகி சுழல் போல் சுற்றுவதைக் காணமுடிகிறது.

எரிமலை வெடித்ததைத் தொடர்ந்து அதிகாரிகள் மஞ்சள் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர்.

அதன்படி, சுற்றுவட்டாரத்தில் இருக்கும் மக்கள், வெளியே வந்தால் தங்கள் வாயையும் மூக்கையும் துணியால் மூடிக்கொள்ள, அல்லது மாஸ்க் அணிந்துகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

சாம்பல் பட்டால், கண்களை சுத்தமான தண்ணீரால் கழுவுவதுடன், தொண்டைவரை கொப்புளிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காண்டாக்ட் லென்ஸ் அணிவதைத் தவிர்க்குமாறும், வீடுகளின் ஜன்னல்களை மூடிவைத்துக்கொள்ளுமாறும் அதிகாரிகள் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்