ஈரானிய ஏவுகணை தாக்குதல்... அமெரிக்க ராணுவ தளங்களில் ஏற்பட்ட பாதிப்பு: வெளியான முதல் புகைப்படம்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

ஈரானிய ஏவுகணை தாக்குதலில் ஈராக்கில் அமைந்துள்ள அமெரிக்க தளங்களின் ஏற்பட்ட சேதம் தொடர்பில் முதன் முறையாக புகைப்படம் வெளியாகியுள்ளது.

ஈரானிய தளபதி குவாசிம் சுலைமானியின் படுகொலைக்கு பதிலடி தரும் வகையில், ஈராக்கில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது கடந்த புதனன்று ஈரான் ஏவுகணை தாக்குதல் முன்னெடுத்தது.

மொத்தம் 22 ஏவுகணைகளை வீசிய ஈரான், அமெரிக்கா மற்றும் கூட்டணி படைகள் பயன்படுத்திவரும் அல் ஆசாத் தளத்தை குறிவைத்தது தெரியவந்தது.

குறித்த தாக்குதலில் 80 பேர் வரை கொல்லப்பட்டதாக முதலில் தெஹ்ரான் செய்தி ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டாலும்,

அதன் பிறகு வெளியான தகவல்களில், உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என்பது உறுதியானது.

ஆனால் ஏவுகணை தாக்குதலுக்கு இலக்கான ராணுவ தளங்கள் சேதமடைந்துள்ளது தொடர்பில் தற்போது முதன் முறையாக புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

மட்டுமின்றி அங்கு பணியாற்றிவரும் தளபதி மார்க் மில்லி வெளியிட்டுள்ள கருத்துகளில், உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது.

செய்தி ஊடகம் ஒன்றிற்கு அளித்துள்ள நேர்காணலில், நான் பார்த்ததை அடிப்படையாகக் கொண்டு நான் நம்புகிறேன்,

ஈரானின் ஏவுகணை தாக்குதலானது கட்டமைப்பு சேதத்தை ஏற்படுத்தும் நோக்கில் வாகனங்கள் மற்றும் உபகரணங்கள் மற்றும் விமானங்களை அழிக்கவும் ராணுவ வீரர்களைக் கொல்லவும் நோக்கமாக இருந்தன, இது எனது சொந்த மதிப்பீடு என தெரிவித்துள்ளார்.

அல் ஆசாத் தளத்தில் அமைந்துள்ள 3 முக்கிய கட்டிடங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளது தற்போது வெளியிடப்பட்டுள்ள புகைப்படங்களில் இருந்து உறுதி செய்யப்பட்டுள்ளது.

அந்த கட்டிடங்கள் அமெரிக்க ராணுவத்தினரால் எதற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது தொடர்பான தகவல் இல்லை.

இருப்பினும், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், ஈரானிய ஏவுகணை தாக்குதலால் எந்த பாதிப்பும் சேதாரமும் இல்லை என்றே வாதிட்டு வருகிறார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers