அமெரிக்காவுடன் கைகோர்த்த மூன்று நேட்டோ நாடுகள்! சிக்கி கொண்ட ஈரான்.. அடுத்து நடக்கப்போவது என்ன?

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

ஈரானுக்கு எதிராக பிரித்தானியா,கனடா, உக்ரைன், அமெரிக்கா ஆகிய நான்கு நாடுகள் ஒன்று திரண்டு உள்ள நிலையில் இந்த நான்கு நாடுகளும் நேட்டோவில் உள்ள நாடுகள் என தெரியவந்துள்ளது.

ஈரான் - அமெரிக்கா இடையில் நிகழ்ந்து வரும் பிரச்சனை உலக நாடுகளுக்கு இடையிலான சண்டையாக உருவெடுத்துள்ளது.

அமெரிக்கா, ஈரான் படை தளபதி குவாசிம் சுலைமானியை கொலை செய்தது தான் இந்த சண்டையின் தொடக்க புள்ளியாக பார்க்கப்படுகிறது.

இதுதான் ஈரான், அமெரிக்கா இடையே சண்டை உருவாக காரணமாக மாறியது. இதற்கு பதிலடியாக ஈராக்கில் உள்ள அமெரிக்க இராணுவ தளவாடங்கள் மீது ஈரான் 22 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.

அமெரிக்காவுடன் மட்டும் நேரடி சண்டையில் இருந்த ஈரான் தற்போது இன்னும் கூடுதலாக மூன்று நாடுகளுடன் சண்டை போட தொடங்கியுள்ளது என்று கூறலாம்.

ஏனெனில், கடந்த மூன்று நாட்களுக்கு முன் ஈரானில் இருந்து பறந்த உக்ரேன் நாட்டு பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானது. இது விபத்து கிடையாது, மனித பிழை காரணமாக சுட்டு வீழ்த்தப்பட்டுவிட்டதாக ஈரான் ஒப்புக்கொண்டது. இதில் 176 பேர் பலியானார்கள்.

இது உக்ரேன் நாட்டின் அரசு விமானம். இதனால் ஈரான் மீது உக்ரைன் கடுமையான கோபத்தில் இருக்கிறது. உக்ரேனுக்கும், ஈரானுக்கும் முன்பே தகராறு இருந்தது.

இதற்கு உக்ரேன் கண்டிப்பாக பழி வாங்கும் என்கிறார்கள். இது தொடர்பாக ஐநாவில் புகார் அளிக்க உக்ரேன் முடிவு செய்துள்ளது.

இன்னொரு பக்கம் ஈரான் ஏவுகணை தாக்குதலில் உக்ரேன் விமானம் விழுந்து நொறுங்கியது தொடர்பாக ஈரான் பதில் சொல்லியாக வேண்டும் என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ எச்சரித்துள்ளார்.

இந்த விமானம் விழுந்து நொறுங்கியதில் மொத்தல் 63 கனடா மக்கள் மரணம் அடைந்தனர். இதனால் இதை மிகப்பெரிய பிரச்சனையாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அணுக தொடங்கி உள்ளார்.

அதேபோல் தற்போது பிரித்தானியா உடனும் ஈரான் சண்டையில் இறங்கி உள்ளது. ஈரானுக்கு பிரித்தானியா கலவரம் ஏற்படுத்த முயல்கிறது. மக்களை கிளர்ச்சிக்கு தூண்டுகிறது என்று ஈரான் கூறி வருகிறது.

இதனால் ஈரானில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற பிரித்தானிய தூதர் ராப் மெக்கைரை கைது செய்யப்பட்டார்.

இதற்கு பதிலடியாக பிரித்தானியா, ஈரான் மீது தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளது.

ஈரான் - அமெரிக்கா இடையில் நடக்கும் சண்டையில் தற்போது பிரித்தானியா உள்ளே நுழைந்துள்ளது. இந்த பிரச்சனையில் பிரித்தானியா அமெரிக்காவிற்கு ஆதரவாக நிலைப்பாடு எடுத்துள்ளது.

ஆகவே ஈரானுக்கு எதிராக பிரித்தானியா, கனடா, உக்ரைன், அமெரிக்கா ஆகிய நான்கு நாடுகள் ஒன்று திரண்டு உள்ளது.

இந்த நான்கு நாடுகளும் நேட்டோவில் உள்ள நாடுகள் ஆகும். இதனால் மீதமுள்ள நேட்டோ படைகளும் விரைவில் ஈரானுக்கும் எதிராக ஒன்று சேரும் என கூறப்படுகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...