இன்னொருமுறை பொதுமக்களை கொன்று குவிக்க அனுமதிக்க முடியாது: ஈரானுக்கு எச்சரிக்கை

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்களை பொலிசார் கடும்போக்குடன் கலைத்துள்ளதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

உக்ரேனிய பயணிகள் விமானத்தை தவறுதலாக சுட்டு வீழ்த்தியதாக ஈரான் ராணுவம் ஒப்புக்கொண்டதை அடுத்து பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர்.

அரசுக்கு எதிராகவும், தலைமை தளபதி பதவி விலக வேண்டும் எனவும், அரசியலமைப்பை பாதுகாக்க வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை முன்வைத்தனர்.

ஆயிரக்கணக்கானோர் குவிந்த இந்த போராட்டமானது ஈரனிய பொலிசாரால் அடக்குமுறைக்கு உள்ளானது.

இதனையடுத்து அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஈரானை எச்சரித்துள்ளது. அமைதி வழி போராட்டங்களை ஒடுக்குவது அரசுக்கு உகந்ததல்ல எனவும் அறிவுறுத்தியுள்ளது.

ஈரானில் கடந்த நவம்பரில் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து முன்னெடுத்த போரட்டமானது கலவரமாக வெடித்தது.

இதில் கலவரத்தை ஒடுக்க பொலிசார் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையால் 300-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதாக அம்னஸ்டி இன்டர்நேஷனல் அறிக்கை வெளியிட்டது.

இன்னும் அதுபோன்றதொரு படுகொலைக்கு ஈரானை அனுமதிக்க முடியாது என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் எச்சரித்துள்ளார்.

உலகம் உங்களை கண்காணித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தெஹ்ரான் நகரத்தில் உள்ள அமீர் கபீர் பல்கலைக்கழக மாணவர்கள், விமான விபத்தில் கொல்லப்பட்டவர்களுக்கு மரியாதை செலுத்தும் நோக்கில் குவிந்தனர்.

இந்த நிலையில் இந்த அஞ்சலி கூட்டம் பின்னர் ஆக்ரோஷமான ஆர்ப்பாட்டமாக மாறியது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்