பஹ்ரைன் பெட்ரோலிய நிறுவனத்தில் ஈரான் அதிரடி தாக்குதல்! வெளிச்சத்திற்கு வந்த முக்கிய தகவல்

Report Print Basu in ஏனைய நாடுகள்

பஹ்ரைன் பெட்ரோலிய நிறுவனமான பாப்கோவில் ஈரான் ஹேக்கர்கள் சைபர் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஈரான் அரசு நிதியுதவி அளிப்பதாக கூறப்படும் ஹேக்கர்கள் குழு, கணினிகளிலிருந்து தரவை நீக்க வடிவமைக்கப்பட்ட வைரஸை பாப்கோ நிறுவனத்தின் நெட்வொர்க்கில் புகுத்தியதாக உள்ளுர் ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளது.

உள்ளுர ஊடகத்தின் அறிக்கையின் படி, கடந்த வாரம் ஈரானிய ஹேக்கர்கள் சந்தேகத்திற்குரிய வகையில் ‘டஸ்ட்மேன்’ எனப்படும் தரவு அழிக்கும் வைரஸ் மூலம் பாப்கோ நிறுவனத்தில் சைபர் தாக்குதல் நடத்தினர்.

தாக்குதல் நீண்ட காலம் நீடிக்கவில்லை என்றும், ஹேக்கர்கள் பாப்கோவில் குறைந்த எண்ணிக்கையிலான கணினிகளை குறிவைத்திருக்கலாம் என்றும் கூறினார்.

இந்த சைபர் தாக்குதலினால் பாப்கோவின் உள்ளுர் மற்றும் சர்வதேச சந்தை செயல்பாடுகள் எந்தவொரு தடங்கலையும் எதிர்கொள்ளவில்லை, எந்தவொரு தாக்கமும் இல்லாமல் வர்த்தகம் வழக்கம் போல் தொடர்ந்தது என்று நிறுவனத்தில் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

உலகெங்கிலும் உள்ள அமைப்புகள், வணிகங்கள் மற்றும் அரசாங்கங்களுக்குள் ஊடுருவும் ஈரானிய ஹேக்கர்கள் நூற்றுக்கணக்கான மில்லியன் டொலர்களை சேதப்படுத்தியுள்ளனர் என ஏஎப்பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்