விமான விபத்தில் உறவினர்களை இழந்து வாடும் குடும்பத்தினர்... ஈரான் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Report Print Santhan in ஏனைய நாடுகள்

ஈரான் விமான விபத்தில் உயிரிழந்த குடுமங்களுக்கு ஆலோசனை வழங்குவதற்கு ஒரு சிறப்பு குழு ஒன்றை உருவாக்கியுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உக்ரேன் இண்டர்நேஷனல் நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று ஈரான் நாட்டு இராணுவ படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டதால், விமானத்தில் இருந்த 176 பேரும் பரிதாபமாக இறந்தனர்.

ஈரான் உண்மையை ஒப்புக் கொண்டதால், அந்நாட்டு அரசின் மீது மக்கள் கடும் கொந்தளிப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். இதனால் போராட்டம் வெடித்து வருகின்றது.

இந்நிலையில் ஈரானிய வெளியுறவு அமைச்சகம், விமான விபத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு ஆலோசனை மற்றும் ஆதரவை வழங்கும் விதமாக ஒரு சிறப்பு குழு ஒன்றை உருவாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்த விமான விபத்தில் பிரித்தானியாவை சேர்ந்த மூன்று பேரும், கனடாவை சேர்ந்தவர்கள் 63 பேரும் உயிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்