ஈராக்கில் இராணுவ தளம் மீது சரமாரி ராக்கெட் தாக்குதல்: வீரர்கள் காயம்

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

ஈராக்கில் அமெரிக்க வீரர்கள் பயிற்சி பெற்று வரும் விமான தளத்தில் 7 ராக்கெட்டுகள் பாய்ந்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

ஈரானிய உயர் இராணுவ தளபதியானா குவாசிம் சுலைமானியின் மரணத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட ராக்கெட் தாக்குதல்களின் இலக்காக பாலாட் இராணுவத் தளம் இருந்தது.

ஆனால் அந்த தாக்குதலில் எந்தவிதமான சேதங்களும் காயங்களும் ஏற்படவில்லை.

இந்த நிலையில் பாக்தாத்திற்கு வடக்கே 80 கிமீ (50 மைல்) தொலைவில் அமைந்துள்ள பாலாட் விமான தளத்தின் ஓடுபாதையில் மோட்டார் குண்டுகள் விழுந்ததாக இராணுவ வட்டாரங்களை குறிப்பிட்டு ராய்ட்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது..

AFP செய்திநிறுவனம், நான்கு ராக்கெட்டுகள் தாக்கியிருப்பதாக கூறியுள்ளது. இந்த சம்பவத்தில் 4 ஈராக்கிய வீரர்கள் காயமடைந்திருப்பதாக முதற்கட்ட செய்திகள் தெரிவிக்கின்றன.

சமீபத்திய வாரங்களில் அதிகரித்து வரும் அமெரிக்க-ஈரானிய பதட்டங்களுக்கு மத்தியில் பெரும்பான்மையான அமெரிக்க துருப்புக்கள் தளத்திலிருந்து ஏற்கனவே வெளியேறிவிட்டதாக இராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜனவரி 4 ம் திகதி, ஈரானிய உயர் இராணுவத் தளபதி சுலைமானி அமெரிக்கப் படைகளால் கொல்லப்பட்டதை அடுத்து, இந்த தளம் ராக்கெட் தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்