சிரியத் தலைவருடன் சேர்ந்து டிரம்பை கேலி செய்யும் விளாடிமிர் புடின்: சிக்கிய வீடியோ காட்சி

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கடந்த வாரம் பஷர் அல் அசாத்துடனான சந்திப்பின் போது அதிபர் டிரம்பை டமாஸ்கஸுக்கு அழைக்குமாறு கேலி செய்துள்ளார்.

ஈரானிய இராணுவ தளபதி குவாசிம் சுலைமானி அமெரிக்க ஆளில்லா விமானத்தால் கொல்லப்பட்டதால் இருநாடுகளுக்கும் இடையே பதற்றம் நிலவி வந்த சமயத்தில், ரஷ்ய அதிபர் புடின் திடீரென சிரியாவிற்கு பயணம் மேற்கொண்டார்.

அப்போது டமாஸ்கஸில் உள்ள கன்னி மரியாவின் ஆர்த்தடாக்ஸ் தேவாலயத்தில் பஷர் அல் அசாத்துடனான சந்திப்பு நிகழ்ந்தது. அங்கு அவர்கள் பேசிய வீடியோ காட்சியானது தற்போது ரஷ்ய ஊடகத்தில் கசிந்துள்ளது.

டமாஸ்கஸின் வாயிலில் பார்வை பெற்ற பிறகு அப்போஸ்தலன் பவுல் கிறிஸ்தவ மதத்திற்கு மாறினான் என தேவாலயத்தின் பெருமை குறித்து அசாத் விளக்கி கொண்டிருந்தார்.

மேலும், டிரம்ப் இங்கு டிரம்ப் வருகை தந்தால் அவருடன் சேர்த்து எல்லாம் சாதாரணமாகிவிடும் என கூறுகிறார்.

உடனே புடின், “அது சரிசெய்யப்படும்… அவரை அழைத்து பாருங்கள். அவர் இங்கு வருவார் என கூறுகிறார். அதற்கு அசாத், டிரம்பை அழைக்கத் தயாராக இருப்பதாக கூறியதும் புடின் புன்னகைக்கிறார்.

இந்த வீடியோ காட்சியானது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...