ஈரானில் வெடித்த போராட்டம்! இரத்த வெள்ளத்தில் சாலையில் இறந்த பெண்.. துப்பாக்கி சத்தம் கேட்டு அலறிய மக்கள்

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்
182Shares

ஈரானில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட போது அந்நாட்டு பாதுகாப்பு படையினர் போராட்டகாரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டதால் அவர்கள் பயத்தில் அலறியதோடு ஒரு பெண் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

ஈரான் தலைநகர் Tehran-ல் அந்நாட்டு உச்சத்தலைவர் Ali Khamenei பதவி விலக வலியுறுத்தி ஆயிரக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கி இரவு போராட்டம் நடத்தினார்கள்.

அப்போது ஈரான் பாதுகாப்பு படையினர் போராட்டகாரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த சமயத்தில் துப்பாக்கி குண்டு பட்டதால் பெண்ணொருவர் இரத்த வெள்ளத்தில் உயிரிழந்ததாக ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளது.

உள்ளூர் பத்திரிக்கையாளர் ஒருவர் சமூகவலைதளத்தில் வெளியிட்ட பதிவில், போராட்ட களத்தில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது உண்மை தான், ஈரானிய மக்களின் உயிருக்கு பெரும் ஆபத்து உள்ளது என தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்