இது தான் டிரம்ப் குறிக்கோள்.. மீறினால் இதான் கதி..! சீனா-ஐரோப்பிய நாடுகளுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை

Report Print Basu in ஏனைய நாடுகள்

ஈரானிடமிருந்து தொடர்ந்து எண்ணெய் வாங்கினால் பொருளாதாரத் தடைகளை எதிர்கொள்ள நேரிடும் என்று அமெரிக்க கருவூல செயலாளர் சீனாவை எச்சரித்துள்ளார்.

ஈரானின் எண்ணெய் பிரச்சனை தொடர்பாக சீனாவுடன் ஆலோசித்து வருகிறோம். நாங்கள் இப்போது ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி வருவாயை 5% குறைத்துள்ளோம், இப்போது அவர்களின் எண்ணெய் வருவாய் குறைந்துள்ளது.

இந்த மீதமுள்ள வருவாயில் பெரும் பகுதியை சீனாவிடமிருந்து ஈரான் பெறுகிறது. நான் சீன அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறேன், அவர்கள் எங்களுடன் சந்தித்து அதைப் பற்றி பேச அதிகாரிகள் குழுவை அனுப்பியுள்ளனர்.

சீன அரசுக்கு சொந்தமான அனைத்து நிறுவனங்களும் ஈரானிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்திவிட்டன, எண்ணெய் துறையில் கூடுதல் நடவடிக்கைகளை முற்றிலுமாக நிறுத்த அமெரிக்க கருவூலம் சீனத் தரப்புடன் நெருக்கமாக செயல்பட்டு வருகிறது.

ஈரானின் எண்ணெய் வருவாயைக் குறைப்பதற்கான டிரம்ப் நிர்வாகத்தின் குறிக்கோளால், சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகளும் கூட அமெரிக்கத் தடைகளை எதிர்கொள்ளக்கூடும் என்று மனுச்சின் எச்சரித்தார். .

சீனா, எல்லோரையும் போலவே, பொருளாதாரத் தடைகளுக்கு இலக்காக உள்ளது, ஈரானிய எண்ணெய் வாங்குவதில் ஈடுபட்டுள்ள அவர்களின் சில கப்பல் நிறுவனங்களை நாங்கள் தடை செய்துவிட்டோம்.

ஈரானுடன் வர்த்தகம் செய்யும் சீனா அல்லது உலக நாடுகள் யாராக இருந்தாலும் நாங்கள் தொடர்ந்து பொருளாதாரத் தடைகளை விதிப்போம்.

ஐரோப்பிய நாடுகளும் இரண்டாம் நிலை பொருளாதாரத் தடைகளின் அபாயத்தை எதிர்கொள்ளக்கூடும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்