புதரில் ஆடைகள் விலக்கப்பட்ட நிலையில் கிடந்த அழகிய இளம்பெண்: பெயரை தவிர எதுவும் நினைவில்லாததால் குழப்பம்!

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்
362Shares

பிரபல ரஷ்ய பத்திரிகை ஒன்றின் மொடலான அழகிய இளம்பெண் ஒருவர் ஆடைகள் விலக்கப்பட்டு கிட்டத்தட்ட நிர்வாணமாக கிடந்த நிலையில், அவருக்கு பெயரைத் தவிர வேறு எதுவும் நினைவில்லாததால் என்ன நடந்தது என்று தெரியாமல் குழப்பம் நிலவுகிறது.

ரஷ்ய மொடலான Ksenia Puntus (21), பிரபல சினிமா இயக்குநர் ஒருவரின் பேரனான Andrei Bakov (20) என்பவரைக் காதலித்து வந்துள்ளார்.

இந்நிலையில், தனது காதலனின் அடுக்கு மாடிக் குடியிருப்புக்கு பின்னாலுள்ள ஒரு புதருக்குள் ஆடைகள் விலக்கப்பட்ட நிலையில், சுயநினைவில்லாமல் காயமடைந்த நிலையில் கிடந்துள்ளார் அவர்.

துப்புரவு தொழிலாளர் ஒருவர் அவரைக் கண்டு பொலிசாருக்கு தகவலளித்துள்ளார்.

பொலிசார் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ள நிலையில், Kseniaவுக்கு தலையிலும் மார்பிலும் காயங்கள் ஏற்பட்டுள்ளதுடன், அவரது இடுப்பெலும்பு, விலா எலும்புகள் மற்றும் கால் எலும்புகள் முறிந்துள்ளது தெரியவந்துள்ளது.

அவருக்கு எப்படி எலும்பு முறிவு ஏற்பட்டது, அவர் எப்படி அந்த புதர் பகுதிக்கு வந்தார், அவரது உடைகள் விலக்கப்பட்டிருந்தது எதனால் என எந்த கேள்விக்கும் பதில் தெரியவில்லை.

Kseniaவைக் கேட்கலாம் என்றால், அவருக்கு அவரது பெயரைத் தவிர எதுவும் நினைவில் இல்லை. பொலிசார் விசாரணை ஒன்றை துவக்கியுள்ளார்கள்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்