ஈரானின் ஏவுகணை தாக்குதல்... சின்னாபின்னமான அமெரிக்க ராணுவ தளங்கள்: வெளியான புகைப்படங்கள்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்
1702Shares

கடந்த வாரம் ஈரானிய ஏவுகணை தாக்குதலில் சின்னாபின்னமான அமெரிக்க ராணுவ தளங்களின் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

ஈரானிய தளபதி குவாசிம் சுலைமானியின் படுகொலைக்கு பதிலடி தரும் வகையில், ஈராக்கில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது கடந்த வாரம் ஈரான் ஏவுகணை தாக்குதலை முன்னெடுத்தது.

குறித்த தாக்குதலில் ஆள் அபாயம் ஏதும் ஏற்படவில்லை என அமெரிக்க அரசு தெளிவுபடுத்தி இருந்தது.

மட்டுமின்றி சேதங்கள் ஏதும் பெரிதாக ஏற்படவில்லை எனவும் சாதித்தது. ஆனால் அதன் பின்னர் சர்வதேச ஊடகங்கள் செயற்கைக்கோள் புகைப்படங்களை வெளியிட்டு, அமெரிக்காவின் கூற்றை பொய்யாக்கியது.

தற்போது முதன் முறையாக ஈராக்கில் உள்ள அமெரிக்காவின் முக்கிய இரு தளங்கள், ஈரானின் ஏவுகணை தாக்குதலில் முற்றாக சிதைந்துள்ள காட்சிகள் புகைப்படங்களாக வெளியாகியுள்ளது.

ஒரு கால்பந்து மைதானம் அளவுக்கு குப்பைகள் குவிந்துள்ள காட்சிகள் அந்த புகைப்படங்களில் பதிவாகியுள்ளது.

ஈரானின் இந்த ஏவுகணை தாக்குதலில் அமெரிக்காவி ராணுவத்தினர் எவரும் கொல்லப்படவில்லை என்ற போதும்,

அதே நாளில் உக்ரேனிய விமானம் ஒன்று ஈரானிய ஏவுகணைக்கு சிக்கிய விவகாரம் தற்போது ஈரானில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரானியா ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்ட ஈராக்கிய பகுதியானது 1,500 ராணுவ குடியிருப்பு அமைந்துள்ள பகுதியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்