சீனாவில் பேருந்து ஒன்று பயணிகளுடன் திடீரென பூமிக்குள் புதைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குயிங்காய் மாகாணத்தில் ஜைனிங் நகரத்திலே இக்கோர சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த எதிர்பாராத சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர், 16 பேர் காயமடைந்துள்ளனர் மற்றும் 4 பேர் காணாமல் போயுள்ளனர்.
சம்பவத்தின் போது பயணிகளை ஏற்ற பேருந்து மருத்துவமனைக்கு அருகே நிறுத்தப்பட்டுள்ளது.
பயணிகள் ஏறிக்கொண்டிருந்த போது திடீரென சாலையில் பெரிய பள்ளம் ஏற்பட்டு பேருந்தின் முன் பகுதி முழுமையாக பூமிக்குள் புதைந்துள்ளது.
இதைக்கண்ட சம்பவயிடத்தில் இருந்த மக்கள் பீதியில் தெறித்து ஓடியுள்ளனர். சில நிமிடங்களில் பெரிய வெடிச் சத்தம் கேட்டு அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறியுள்ளது.
#China A bus fell into a suddenly developed sinkhole when passengers were boarding the bus at the bus stop.
— W. B. Yeats (@WBYeats1865) January 13, 2020
Explosions and fire are visible from the sinkhole.
This happened in Xining, Qinghai Province; some sources suggest 13 were injured and 2 are still missing. pic.twitter.com/ieB1TdnfvX
தகவல் அறிநித்து சம்பவியிடத்திற்கு விரைந்த அவசர சேவை உதவிக்குழுவினர், கிரேன் உதவியுடன் பேருந்தை வெளியே எடுத்துள்ளனர்.
மேலும், காயமடைந்த 16 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். மாயமான 4 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சாலையில் திடீரென பெரிய பள்ளம் ஏற்படத்தற்கான தற்போது வரை வெளியாகவில்லை.