ஈரானின் வான்வெளி முன்பை விட தற்போது பாதுகாப்பாக உள்ளதாக அந்நாட்டின் இராணுவ தளபதி கூறியுள்ளார்.
ஈரான் குத்ஸ் படைக்கு தலைமை தாங்கிய குவாசிம் சுலைமானி அமெரிக்காவின் தாக்குதலில் கொல்லப்பட்டார்.
இதற்கு பழிவாங்கும் விதமாக ஈராக்கில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது.
இதன் பின்னர் ஈரான் தலைநகரில் இருந்து 176 பயணிகளுடன் கிளம்பிய விமானம் விபத்தை சந்தித்ததில் அனைவரும் உயிரிழந்தனர்.
இதை தொடர்ந்து தங்களின் ஏவுகணை தான் அந்த விமானத்தை வீழ்த்தியது என ஈரான் ஒத்து கொண்டதையடுத்து பல உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தன.
இதன் காரணமாக ஈரானின் வான்வெளி பாதுகாப்பு குறித்து அச்சம் நிலவியது.
இந்த சூழலில் ஈரானின் இராணுவ தளபதி அந்நாட்டு வான்வெளி தொடர்பில் முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
அதில், ஈரானின் வான்வெளி முன்பை விட தற்போது மிகவும் பாதுகாப்பாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.