176 பேரின் உயிரை பறித்த விமானத்தை வீழ்த்திய விவகாரம்! கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை வெளியீடு

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

ஈரானில் 176 பயணிகளுடன் சென்ற விமானத்தை வீழ்த்தியது தொடர்பாக போராட்டம் நடத்திய 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அமெரிக்கா-ஈரான் இடையே நிலவி வந்த பதட்டமான சூழலில் தெஹ்ரானில் இருந்து புறப்பட்ட உக்ரைனுக்கு சொந்தமான பயணிகள் விமானம் தரையில் விழுந்து வெடித்து சிதறியது.

இதில் பயணித்த 176 பேரும் உயிரிழந்தாக அறிவிக்கப்பட்டது.

இந்த சூழலில் விமானத்தை வீழ்த்தியதாக ஈரான் ஒப்பு கொண்டது.

இதை தொடர்ந்து ஈரான் அரசை எதிர்த்து ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட 30 பேர் கைது செய்யப்பட்டதாக நீதித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. சட்டத்துக்கு புறம்பான போராட்டத்தில் ஈடுபட்டதாக அவர்களை கைது செய்யப்பட்டுள்ளனர்.

நீதித்துறை செய்தி தொடர்பாளர் இஸ்மாயில் இந்த தகவலை உறுதி செய்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்