பனியின் அடியில் புதைந்த கிராமங்கள்... 57 பேர் பரிதாப பலி! கமொரவில் சிக்கிய திகிலூட்டும் காட்சி

Report Print Basu in ஏனைய நாடுகள்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கடந்த 24 மணிநேரத்தில் பனிச்சரிவில் சிக்கி 57 பேர் உயிரிழந்துள்ள சம்பம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது

நீலம் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட பனிச்சரிவில் 15 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதில், 45 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளது. பனிச்சரவில் சிக்கி காயமடைந்த 42 பேர் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

மேலும், மசூதி உட்பட 78 வீடுகள் ஓரளவு சேதமடைந்துள்ளதாகவும், 14 கடைகள், 3 வாகனங்கள், 3 இரு சக்கர வாகனங்கள் ஆகியவையும் சேதமடைந்துள்ளதாக துணை ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட பகுதிகிளல் தேசிய பேரிடம் மேலாண்மை ஆணையம் மற்றும் சம்மந்தப்பட்ட துறையினர் முழு வீச்சில் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, மருந்து மற்றும் போர்வைகள் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்