மீண்டும் தாக்குதலைத் தொடங்கினால்.. இது தான் கதி! பகிரங்கமாக எச்சரித்த ஜனாதிபதி

Report Print Basu in ஏனைய நாடுகள்
1582Shares

கிழக்கு லிபிய தளபதி கலீஃபா ஹப்தார் மீண்டும் தாக்குதலைத் தொடங்கினால், அவருக்கு ‘ சரியான பாடம் கற்பிப்பேன்’ என்று துருக்கிய ஜனாதிபதி எர்டோகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

லிபியா தலைநகர் திரிப்போலியில் ஐ.நா. அங்கீகாரம் பெற்ற அரசாங்கத்துடன் ஒன்பது மாத கால சண்டையை முடிவுக்கு கொண்டுவரும் சமாதான ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமல் ஹப்தார் மாஸ்கோவில் இருந்து வெளியேறினார்.

திரிப்போலியில் நிர்வாகம், அல்-கொய்தாவுடனான தொடர்புகளைக் கொண்ட குழுக்கள் உட்பட ஏராளமான ஆயுதமேந்திய போராளிகளால் ஆதரிக்கப்படுகிறது.

பல ஐரோப்பிய மற்றும் வளைகுடா நாடுகளால் ஆதரிக்கப்படும் ஹப்தார், இந்த போராளிகளை அதிகாரத்திலிருந்து அகற்றுவதாக உறுதியளித்துள்ளார்.

நாட்டின் நியாயமான நிர்வாகம் மற்றும் லிபியாவில் உள்ள எங்கள் சகோதரர்கள் மீதான தாக்குதல்களைத் தொடர்ந்தால், ஹப்தாருக்கு சரியான பாடம் கற்பிக்க நாங்கள் தயங்க மாட்டோம் என்று எர்டோகன் எச்சரித்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை பெர்லினில் நடைபெறும் பேச்சுவார்த்தையில் ஐரோப்பிய, வட ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள், ஐ.நா., ஐரோப்பிய ஒன்றியம், ஆப்பிரிக்கா யூனியன் மற்றும் அரபு லீக் ஆகிய நாடுகள் கலந்து கொள்கின்றன.

குறித்த பேச்சுவார்த்தையின் போது இந்த விவகாரம் குறித்து விவாதிக்கப்படும் என்று எர்டோகன் கூறினார்.

ஹப்தார் போர்நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை. அவர் முதலில் ஆம் என்று சொன்னார், ஆனால் பின்னர் துரதிர்ஷ்டவசமாக மாஸ்கோவை விட்டு வெளியேறினார்.

இதை தவிர்த்து, மாஸ்கோவில் நடந்த பேச்சுவார்த்தைகள் நேர்மறையானவை என்று நாங்கள் காண்கிறோம், ஏனெனில் அவை ஹப்தாரின் உண்மையான முகத்தை சர்வதேச சமூகத்திற்குக் காட்டியுள்ளது என துருக்கி ஜனாதிபதி எர்டோகன் கூறியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்