தற்காலிக கைலாசம் அமைக்கப்பட்டுள்ள சொகுசு கப்பல்- நித்தியின் கடலை சுற்றும் பயணம்

Report Print Abisha in ஏனைய நாடுகள்

நித்தியானந்தா சொந்தமாக குட்டி கப்பல் ஒன்றை வாங்கி அதன் மூலம் கடலில் சுற்றி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஈக்குவாடார் நாட்டில் உள்ள மாஃபியா கும்பலுடன் தொடர்பு கிடைத்த நித்தியானந்தா கரீபியன் கடல் பகுதியிலுள்ள குட்டி நாட்டிலிருந்து பாஸ்போர்ட் ஒன்று வேண்டும் என்று கேட்டுள்ளார். இதற்கு கோடிக்கணக்கான பணமும் கை மாறப்பட்டுள்ளது.

பணம் கைமாறியதும், பேசிய படி பெலிஸ் என்ற குட்டி தீவின் பாஸ்போர்ட் நித்தியானந்தாவிற்கு கை மாறியுள்ளது அந்த கும்பல்.

அந்த பாஸ்போர்டை வைத்து பல நாடுகளில், சுற்றி வருகிறாராம். எந்த நாட்டிற்கு சென்றாலும், தாம் சிக்கி கொள்வோம் என்ற அச்சம் நித்திக்கு இருந்து வருகிறது.

தற்போது எந்த இடம் தனக்கு பாதுகாப்பாக இருக்கும் என்று தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறாராம் நித்தியானந்தா. மேலும், சிறிய அளவிலான சொகுசு கப்பல் ஒன்றை விலைக்கு வாங்கியிருக்கிறார். அந்த கப்பலில் தான் தற்காலிகமாக கைலாசாவாக மாற்றியுள்ளாராம்.

சகல வசதிகளுடன் கூடிய அந்தக் கப்பலில் இருந்துதான் அவர் வெளியிடும் வீடியோக்களின் படப்பிடிப்பு நடைபெறுவதாக கூறப்படுகின்றது.

அந்த கப்பல் தற்போது கரீபியன் கடல் பகுதியின் சர்வதேச எல்லையில் தொடர்ந்து சுற்றிக்கொண்டிருக்கிறது. சர்வதேச கடல் பகுதியில் பயணிக்கும் கப்பலை வேறு எந்த நாட்டு கப்பல் படையினர் பிடிக்க முடியாது.

தனது யூ-டியூப் உரையினை பெரும்பாலும் தனது சொகுசுக் கப்பலில் வைத்துக்கொள்ளும் நித்தி, அதன் ஒளிபரப்பை மட்டும் வேறு நாட்டினுடைய ஐ.பி அட்ரஸிலிருந்து செய்வதாகவும் தகவல் கிடைத்திருக்கிறது. தகவல் தொழில்நுட்பப் பிரிவில் நிபுணத்துவம் வாய்ந்த மூன்று பேர் நித்தி யுடன் இருக்கின்றனர். அவர்கள் மூலமே கைலாசா டி.வி ஒளிபரப்பு தங்குதடையின்றி நடக்கிறது" என்று ஆனந்த விகடன் இணைய பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்