13 ஆண்டுகளாக உங்களிடம் பொய் சொன்னேன்... மன்னியுங்கள்: ஈரான் பெண்மணியின் உருக்கமான வேண்டுகோள்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

உக்ரேனிய பயணிகள் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் ஒப்புக்கொண்டதை அடுத்து, பிரபல பெண் ஊடகவியலாளர் ஒருவர் பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார்.

ஈரானிய அரசின் உத்தியோகப்பூர்வ செய்தி ஊடகத்தில் பணியாற்றி வந்துள்ள பிரபல ஊடகவியலாளர் Gelare Jabbari ராஜினாமா செய்துள்ளார்.

தொடர்ந்து, தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஈரானிய மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார்.

கடந்த 13 ஆண்டுகளாக உங்களிடம் அரசு சார்பில் பொய்களை கூறி வந்ததாகவும், அதற்கு மன்னிப்பு கோருகிறேன் என அவர் அதில் பதிவு செய்துள்ளார்.

ஆனால் சில நிமிடங்களிலேயே அந்த இன்ஸ்டாகிராம் பதிவை அவர் நீக்கியுள்ளார்.

மட்டுமின்றி இனிமேலும், தொலைக்காட்சிகளில் பணியாற்ற விரும்பவில்லை எனவும் அவர் அழுத்தமாக பதிவு செய்துள்ளார்.

ஜப்பாரி கடந்த 13 ஆண்டுகளாக ஈரான் அரசு தொலைக்காட்சியில் பணியாற்றி வந்துள்ளார். பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.

ராஜினாமா தொடர்பில் இன்ஸ்டாகிராம் பதிவை திடீரென்று நீக்கியது குறித்து ஜப்பாரி இதுவரை விளக்கமளிக்கவில்லை.

ஊடகவியலாளர் ஜப்பாரி மட்டுமல்ல, சபா ராட் மற்றும் சஹ்ரா கட்டாமி ஆகியோரும் தங்கள் ராஜினாமாக்களை அறிவித்துள்ளனர்.

உக்ரேன் விமானமானது இயந்திர கோளாறால் விபத்துக்குள்ளானது என்பதை முதலில் அறிவித்தவர் ஊடகவியலாளர் ஜப்பாரி.

தொடர்ந்து இரண்டு நாட்கள் இதையை ஈரானிய ஊடகங்கள் பொதுமக்களுக்கு தெரிவித்து வந்துள்ளது.

அதன் பின்னர் ஏவுகணை தாக்குதலுக்கு உக்ரேனிய விமானம் இலக்கானதை அறிவிக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாகவே ஊடகவியலாளர் ஜப்பாரி ராஜினாமா செய்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

மட்டுமின்றி, ஈரானிய ஊடகவியலாளர்கள் பலர் இந்த விவகாரம் தொடர்பில் பொதுமக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்