அமெரிக்கர்களுக்கு ஏற்பட்ட கதி தான்... ஐரோப்பியர்களுக்கும் ஏற்படும்..! பகிரங்கமாக எச்சரித்த ஈரான் ஜனாதிபதி

Report Print Basu in ஏனைய நாடுகள்

பிரான்ஸ், பிரித்தானியா மற்றும ஜேர்மனி ஆகிய ஐரோப்பிய நாடுகள் 2015 அணுசக்தி ஒப்பந்தத்தில் பிரிசினை தீர்க்கும் வழிமுறையை செயல்படுத்தியுள்ள நிலையில் ஈரான் ஜனாதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஈரானிய ஜனாதிபதி ஹசன் ரூஹானி கூறியதாவது, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எப்போதும் வாக்குறுதிகளை மீறுவார்.

தளபதி சுலைமானி படுகொலை செய்யப்பட்ட பின்னர் பிராந்தியத்தில் நடந்த குற்றங்களுக்கு அமெரிக்கா மன்னிப்பு கேட்க வேண்டும்.

மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க வீரர்கள் ஆபத்தில் உள்ளனர், ஐரோப்பிய வீரர்களுக்கும் ஆபத்து ஏற்படக்கக்கூடும் என எச்சரித்துள்ளார்.

மேலும், 2018ல் அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து விலகிய அமெரிக்கா, மீண்டும் வாஷிங்டனை அணுசக்தி ஒப்பந்தத்திற்குத் திரும்பும்படி கூறினார்.

பிரித்தானியா பிரதமர், என்ன நினைக்கிறார் என்று எனக்குத் தெரியவில்லை. அணுசக்தி ஒப்பந்தத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, டிரம்ப் திட்டத்தை செயல்படுத்துவோம் என்று அவர் கூறுகிறார்.

நீங்கள் தவறான நடவடிக்கை எடுத்தால், அது உங்களுக்கு தீங்கு விளைவிக்கும். சரியான பாதையைத் தேர்ந்தெடுங்கள். அணுசக்தி ஒப்பந்தத்திற்கு திரும்புவதே சரியான பாதை.

பொருளாதாரத் தடைகள் நீக்கப்பட்டவுடன் ஒப்பந்தத்தில் கட்டுப்பாடுகளை மீறிய நடவடிக்கைகளை ஈரான் மாற்றியமைக்க முடியும் என்று ரூஹானி கூறினார்.

மேலும், அமெரிக்க பொருளாதாரத் தடைகளிலிருந்து ஈரானின் பொருளாதாரத்தைப் பாதுகாப்பதற்கான வாக்குறுதிகளை ஐரோப்பியர்கள் ரத்து செய்ததாக ரூஹானி விமர்சித்தார்.

அமெரிக்கா பிராந்தியத்தில் இருந்து விலகியால்தான் மத்திய கிழக்கிற்கு அமைதி வர முடியும் என்ற ஈரானின் நீண்டகால நிலைப்பாட்டை ரூஹானி மீண்டும் கூறினார்.

இன்று அமெரிக்க வீரர்கள் இப்பகுதியில் பாதுகாப்பாக இல்லை. உலகில் பாதுகாப்பின்மை இருப்பதை நாங்கள் விரும்பவில்லை.

நீங்கள் இங்கிருந்து செல்ல வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம், ஆனால் போருடன் அல்ல. நீங்கள் புத்திசாலித்தனமாக பிராந்தியத்தை விட்டு வெளியேற விரும்புகிறோம், அது உங்கள் நன்மைக்காக என ரூஹானி மீண்டும் கூறினார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்