வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்ற இடத்தில் வேன் டயர் வெடித்து விபத்து: சாலையில் தூக்கியெறியப்பட்ட பிரித்தானியர்கள்!

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

பிரித்தானியர்கள் சிலர் தாய்லாந்துக்கு சுற்றுலா சென்ற இடத்தில், அவர்கள் சென்ற வேனின் டயர் வெடித்துச் சிதற, வேன் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது.

வெளியாகியுள்ள வீடியோவில், வேன் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த தடுப்பில் மோதியும் நிற்காமல், சாலையில் ஒரு வட்டமடிக்க, வேனின் பின்பக்கக் கதவு திறந்து, பேருந்திலிருந்தவர்கள் தூக்கி வீசப்படுவதைக் காணலாம்.

எட்டு பிரித்தானிய சுற்றுலாப்பயணிகள் பாங்காகில் வந்து இறங்கி, புகழ் பெற்ற ரிசார்ட் ஒன்றை நோக்கி சென்று கொண்டிருந்திருக்கின்றனர்.

அப்போது திடீரென வேன் விபத்துக்குள்ளாகியுள்ளது.

சாலையோர தடுப்பில் மோதிய வேன் சாலையில் வட்டமடிக்கும்போது, வேனில் பயணித்த எட்டு பிரித்தானியர்களும் வேனிலிருந்து வெளியே தூக்கி வீசப்பட்டு நெடுஞ்சாலையில் வந்து விழுந்துள்ளனர்.

பின்னால் வந்த வாகனங்கள் அனைத்தும் உடனடியாக பிரேக் பிடித்ததால், மேலும் அசம்பாவிதங்கள் நிகழ்வது தவிர்க்கப்பட்டது.

சாலையில் விழுந்த சிலர், உடனடியாக எழுந்து விழுந்து கிடக்கும் மற்றவர்களை சாலையோரம் கொண்டு செல்ல முயல்வதையும், அந்த CCTV கமெரா காட்சியில் காண முடிகிறது.

வேனில் பயணித்த பிரித்தானியர்கள் எட்டு பேருமே காயமடைந்துள்ள நிலையில், அவர்களில் மூன்று பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் பெயர், பிரித்தானியாவின் எந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் போன்ற எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்