வட கொரிய அதிபரை மகிழ்விக்க பாடி ஆடும் பெண் ராணுவத்தினர்: வெளியான வீடியோ!

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

வட கொரிய அதிபரான கிம் ஜாங் உன்னை மகிழ்விப்பதற்காக ராணுவ வீராங்கனைகள் ஆடிப் பாடும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

ராணுவ சீருடையில் இருக்கும் அந்த வீராங்கனைகள் இசைக்கருவிகளை மீட்டிப் பாட, அத்துடன் நடனமும் ஆட, அதை ஒரு டெஸ்கின் பின்னால் உட்கார்ந்து கவனிக்கிறார் கிம்.

முதலில் பெரிய அளவில் இம்ப்ரெஸ் ஆகாத கிம், பின்னர் கைதட்டி ரசிக்கிறார்.

பிறகு அந்த வீராங்கனைகள் அனைவரும் கிம்முடன் புகைப்படமும் எடுத்துக்கொள்கிறார்கள்.

அப்போது ஒரு பெண்ணின் தொப்பியை மற்றொரு பெண்ணின் கை தெரியாமல் பட்டு தட்டி விட, கடும் கோபத்தைக் காட்டுகிறார் அந்த பெண்.

இந்த சம்பவம் எப்போது, எங்கு நடந்தது என்பது தெரியவில்லை என்றாலும், நேற்று அந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்