குண்டு மழை பொழிந்த போர் விமானங்கள்... கொல்லப்படும் மக்கள்: வெளிச்சத்திற்கு வரும் துயரம்

Report Print Basu in ஏனைய நாடுகள்

சிரியாவில் அந்நாட்டு இராணுவம் மற்றும் ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதலில் 18 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

சிரியாவில் ஷியா பிரிவை சேர்ந்த அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கும் சன்னி பிரிவைச் சேர்ந்த கிளர்ச்சிப் படைகளுக்கும் கடந்த 2011-ம் ஆண்டு முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது.

அதிபர் ஆசாத்துக்கு ரஷ்யாவும் சன்னி பிரிவு கிளர்ச்சிப் படைகளுக்கு அமெரிக்கா, துருக்கி உள்ளிட்ட நாடுகளும் ஆதரவு அளித்து வருகின்றன.

சிரியா உள்நாட்டுப் போரில் கடந்த 4 மாதங்களில் 1,000 பேர் உயிரிழந்துள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர்.

இந்நிலையில், சனிக்கிழமை காலை ரஷ்ய போர் விமானங்கள் தாரா அஸ்ஸா, காஃப்ர்னாஹா, அஞ்சாரா, அலெப்போவுக்கு மேற்கே அல் காசிமியா பகுதி, மற்றும் கிராமப்புற மராத் அல்-நுமனில் மார்ஷோரின் ஆகியவற்றில் தாக்குதல்களை மேற்கொண்டன.

அதே நேரத்தில் சிரிய அராங்கத்தின் இராணுவப் படைகள் மார் ஷோரின், டெல்மானாஸ் மற்றும் மார் ஸாமாஷா ஆகிய பகுதியில் தாக்குதல் நடத்தின.

அலெப்போ மேற்கு கிராமப்புறத்தில் உள்ள அஞ்சாரா பகுதியின் பாலா கிராமத்தை குறிவைத்து ரஷ்ய போர் விமானங்கள் நடத்திய தாக்குதலில் கணவம்-மனைவி மற்றும் அவர்களது மூன்று குழந்தைகள் என குடும்பத்துடன் கொல்லப்பட்டதாக சிரிய கண்காணிப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

வெள்ளிக்கிழமை இழந்த பகுதிகளை மீண்டும் கைப்பற்றும் முயற்சியில் சிரிய அரசாங்கம் இந்த புதிய தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

அலெப்போ நகரத்தின் மேற்கு கிராமப்புற பகுதியில் சிரிய அரசாங்கம் மற்றும் ரஷ்யா நடத்திய வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 15 பேர் காயமடைந்துள்ளனர் என்று சிரிய மனித உரிமைகளுக்கான ஆய்வகம் தெரிவித்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers