பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி பயத்தில் தான் இப்படி செய்தனர்! உண்மைகளை உடைத்து கடும் எச்சரிக்கை விடுத்த ஈரான்

Report Print Basu in ஏனைய நாடுகள்

ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் அலி லரிஜானி ஐரோப்பிய ஒன்றியத்திற்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பிரான்ஸ், பிரித்தானியா மற்றும் ஜேர்மனி ஆகியவை 2015 ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தில் பிரச்சனை தீர்க்கும் வழிமுறையைத் செயல்படுத்துவதற்கான முடிவை சமீபத்தில் அறிவித்தன.

அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரான் அதன் உறுதிப்பாட்டைக் குறைப்பதன் பிரதிபலிப்பாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக 3 ஐரோப்பிய நாடுகள் கூட்டாக கூறின. இது ஈரானுக்கு எதிரான ஐ.நா பொருளாதாரத் தடைக்கு மீண்டும் வழிவகுக்கும் என கூறப்படுகிறது.

ஜே.சி.பி.ஓ என்றழைக்கப்படும் 2015 ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தில் பிரச்சனை தீர்க்கும் வழிமுறையைத் செயல்படுத்தியுள்ளது தொடர்பாக, ஐரோப்பிய நாடுகள் அநியாய நடவடிக்கைகளை எடுத்தால், சர்வதேச அணுசக்தி நிறுவனத்துடனான ஒத்துழைப்பை ஈரான் மறுபரிசீலனை செய்யும் என்று எச்சரித்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை ஈரான் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இந்த அறிவிப்பு குறித்து பதிலளித்த சபாநாயகர் அலி லரிஜானி, இந்த நடவடிக்கைக்கு ஈரான் நடத்தைக்கும் எந்த தொடர்பும் இல்லை, ஆனால், அமெரிக்கா மீது ஐரோப்பிய நாடுகளுக்கு உள்ள பயத்தின் விளைவு தான் இது.

பிரச்சனை தீர்க்கும் வழிமுறையை செயல்படுத்தாவிட்டால், வாகன கட்டணத்தை 25% அதிகரிக்கும் என்று அமெரிக்கா அச்சுறுத்தியதாக ஐரோப்பிய வெளியுறவுத்துறை அமைச்சர் வெளிப்படையாகக் கூறியது வருந்தத்தக்கது என்று லரிஜானி கூறினார்.

எனவே பிரச்சினை ஈரானின் நடத்தையில் அல்ல, மாறாக, பிரச்சினை அமெரிக்காவின் அச்சுறுத்தல்கள் தான். பொருளாதார ரீதியாக சக்திவாய்ந்த நாடான அமெரிக்கா, நியாயமற்ற மற்றும் அவமதிப்பான அணுகுமுறையை கடைப்பிடிக்க ஐரோப்பாவை கட்டாயப்படுத்துகிறது.

ஈரான் அச்சுறுத்தல்களுக்கு அஞ்சுவது இல்லை, ஆனால் ஐரோப்பா, எந்தவொரு காரணத்திற்காகவும், அணுசக்தி ஒப்பந்தத்தில் 37வது விதியை பயன்படுத்தி நியாயமற்ற அணுகுமுறையைக் கடைப்பிடித்தால், நாங்கள் சர்வதேச அணுசக்தி நிறுவனத்துடனான எங்கள் ஒத்துழைப்பு குறித்து தீவிர முடிவை எடுப்போம் என்று வெளிப்படையாகக் கூறுகிறோம்.

இதற்கான திட்டம் ஈரானிய நாடாளுமன்றத்தில் தயாராக உள்ளது என்று லரிஜானி கூறினார்.

நாங்கள் இதைத் தொடங்க மாட்டோம், ஆனால் ஐரோப்பியர்களின் நடவடிக்கைகளுக்கு ஏற்ப செயல்படுவோம், எனவே அவர்கள் இதைப் பற்றி நியாயமாக இருப்பது நல்லது என்று ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் அலி லரிஜானி எச்சரித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்