வெடித்து தீப்பிடித்து எரிந்த விமானத்தின் இன்ஜின்.... பீதியில் நடுங்கிய உள்ளே இருந்த பயணிகள்: திகிலூட்டும் காட்சி

Report Print Basu in ஏனைய நாடுகள்

ரஷ்யாவில் புறப்படுவதற்கு சில நிமிடங்கள் முன்னதாக பயணிகள் விமானத்தின் இன்ஜின் வெடித்து தீப்பிழம்புகள் வெளியேறியதால் பயணிகள் பீதியடைந்தனர்.

நோவோசிபிர்ஸ்க் நகரில் உள்ள டோல்மாசெவோ விமான நிலைய ஓடுபாதையில் புறப்பட தயாராக இருந்த போது ஏர்பஸ் ஏ-321 இன்ஜின் தீப்பிடித்து எரிந்து வெடிக்கும் சத்தம் கேட்டுள்ளது.

விமானத்தில் 27 குழந்தைகள் உட்பட 208 பயணிகள் இருந்து நிலையில் விமானக் குழுவினர், உடனடியாக தீயணைப்பு தடுப்பு அமைப்பை செயல்படுத்தியுள்ளனர்.

உடனே தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். இன்ஜின் தீப்பிடித்து எரிந்ததை கண்ட விமானத்திலிருந்த பயணிகள் பீதியடைந்துள்ளனர்.

குறித்த விமானம் ரஷ்யாவின் மிகப்பெரிய உள்நாட்டு விமான நிறுவனமான எஸ்7-க் சொந்தமானது. இது நோவோசிபிர்ஸ்க்-ல் இருந்து வியட்நாமின் கேம் ரானுக்கு புறப்படவிருந்தது.

விமானக் குழுவினர் தீயணைப்பு அமைப்பை செயல்படுத்தியவுடன், விமானம் உடனடியாக திரும்பியது. இந்த விமானத்திற்கு பதில் மற்றொரு விமானத்தில் பயணகிள் வியட்நாமிற்கு புறப்பட்டனர்.

குறித்த விமானம் அவசர தொழில்நுட்ப பழுதுபார்த்தலுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என எஸ்-7 நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்