ஈரானில் விமான விபத்தில் கொல்லப்பட்ட உக்ரேனியர்களின் சடலங்கள் நாடு திரும்பியது: கண்ணீரில் மக்கள்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

அமெரிக்க உடனான போர் பதற்றங்கள் அதிகரித்தபோது ஈரானால் தவறாக சுட்டு வீழ்த்தப்பட்ட பயணிகள் விமானத்தில் கொல்லப்பட்ட 11 உக்ரேனியர்களின் சடலங்கள் தேசியக் கொடியால் போர்த்தப்பட்டு தலைநகர் கீவ்வில் வந்து சேர்ந்துள்ளன.

கீவ்வின் போரிஸ்பில் விமான நிலையத்தில் முன்னெடுக்கப்பட்ட சடங்குகளில் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

9 உக்ரேனிய விமான ஊழியர்களும் இரண்டு பயணிகளுமே குறித்த விமான விபத்தில் கொல்லப்பட்டவர்கள்.

உக்ரேனிய பயணிகள் விமான ஊழியர்கள் சிலர் கண்ணீருடன் இந்த சடங்குகளில் பங்கேற்றுள்ளனர்.

சிறப்பு விமானத்தில் இருந்து 11 பேரின் சவப்பெட்டிகளை வெளியே கொண்டுவரும் போது, உறவினர்களும் விமான ஊழியர்களும் இரு பக்கவும் வரிசையாக நின்று உக்ரேனிய கொடியசைத்து மரியாதை செலுத்தினர்.

(Ukrainian Presidential Press Office via AP)

தெஹ்ரானில் இருந்து 176 பேருடன் கடந்த 8 ஆம் திகதி கீவ் நோக்கி கிளம்பிய உக்ரேனிய விமானமானது தவறுதலாக ஈரானிய ஏவுகணைக்கு இலக்கானது.

ஈரானிய தளபதி குவாசிம் சுலைமானியை அமெரிக்க ஆளில்லா விமானம் மூலம் படுகொலை செய்ததன் பதிலடியாகவே ஈராக்கில் அமைந்துள்ள அமெரிக்க தளங்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் முன்னெடுத்தது.

இந்த விவகாரத்தின் சுமார் 4 மணி நேரத்திற்கு பிறகு தெஹ்ரானில் இருந்து புறப்பட்ட பயணிகள் விமானத்தை, ஈரானிய ராணுவம் அமெரிக்காவின் வான்படை என கருதியதாக கூறப்படுகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்